how to remove warts naturally using only 1 ingredient in tamil

remove warts naturally: இந்த ஒரு பொருள் போதும்,ஒரே இரவில் வலியில்லாமல் மரு  நீங்கிவிடும்! 

நம் அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. சில அழகாக இருந்தாலும் முகங்களில் மருக்கள் ஏற்பட்டு முக அழகையே கெடுக்க செய்கிறது. மருக்கள் அழகினை கெடுக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் ,மறுபக்கம் இந்த மரு வலியையும் ஏற்படுத்துகிறது. மருவை வலியில்லாமல் நிரந்தரமாக நீக்குவதற்கு ஏதேனும் வழிகள் உண்டா என்று கேட்டால் அதற்கு இயற்கை முறையில் பல வழிகள் உண்டு. நம் முன்னோர்கள் பின்பற்றிய இந்த வழிகளை பயன்படுத்தி நாமும் பயன்பெறுவோம்.

பொதுவாக மறு என்பது முகத்தில் மட்டுமின்றி கழுத்துப் பகுதி முதுகு கை கால்கள் என உடலில் பல இடங்களில் தோன்றும். இன்றைய நவீன காலகட்டத்தில்  மருக்களை நீக்குவதற்கு, பல நவீன முறை ட்ரீட்மென்ட் இருந்தாலும், அவற்றை சில வழியை கொடுப்பதாகவும் சில வழி இல்லாமல் மருக்களை நீக்குவதாகவும் கூறுகின்றனர். ஆனால் வலி இருக்கிறதோ வலி  இல்லையோ எதுவாக இருந்தாலும் பக்க விளைவுகள் ஏதேனும் வந்து விடுமோ  என்று அச்சத்தோடு இருப்பதற்கு பதிலாக இந்த இயற்கை முறைகளை பயன்படுத்தி, அந்த அச்சத்தை போக்குவதோடு மருக்களையும் முழுமையாக போக்கலாம்.

 மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை முழுவதுமாக படித்து உங்களின் அழகை கெடுக்கும் மற்றும் உங்களுக்கு வலிகளை கொடுக்கும் மருக்களை நிரந்தரமாக போக்குங்கள்.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர்  மருக்களை வேரோடு நீக்குவதற்கு சிறந்த தீர்வாக காணப்படுகிறது. காதுகளை சுத்தம் செய்யும் பட்ஸ்சை பயன்படுத்திக் கொள்ளலாம்.பட்ஸ்சின் ஒரு முனையை ஆப்பிள் சைடர் வினிகரில்  நினைத்து  மருக்கள் மீது படும் படி வைக்கவும். பட்சிற்க்கு பதிலாக காட்டன் பஞ்சுகள் கூட பயன்படுத்தலாம்.

தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை இதுபோல வைக்க வேண்டும். இது போல் செய்வதன் மூலம் மருக்கள் கருமையாகி சுற்றி உள்ள பகுதிகள் வறண்டு மரு  விழுந்துவிடும் .இவ்வாறு தினமும் இது போல செய்து வந்தால் ஒரு வாரத்திற்குளே மருக்கள் முற்றிலும் வலி இல்லாமல் நீங்கிவிடும்.

பூண்டு

பூண்டு ஒரு சிறந்த மருத்துவ  குணம் வாய்ந்த பொருளாகும். மருக்களை நீக்குவதற்கு பூண்டு பெரிதும் உதவுகிறது. பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது பூண்டுகளை நசுக்கியோ  உடலில் உள்ள மருக்கள் மீது வைக்க வேண்டும். பூண்டை பேஸ்ட் ஆக அரைத்தும் பயன்படுத்தலாம். அதிக அளவில் வைக்க வேண்டாம் சிறு துளிகளே போதுமானது. ஒரு  மீடியம் சைஸ் பூண்டு பயன்படுத்தினால் சிறு மருவாக இருந்தால்  நான்கு அல்லது ஐந்து மருக்களுக்கு பயன்படுத்தலாம். மருக்கள் மீது மட்டுமே பூண்டுகளை வைக்கவும்.  இரவு நேரங்களில் இது போல வைத்து விட்டு தூங்குங்கள். இரண்டே நாட்களில் மருக்கள் முழுவதும் வேரோடு விழுந்து விடும்.

உருளைக்கிழங்கு சாறு

தோல் உரித்த உருளைக்கிழங்கை மருக்கள் மேல் தடவி வரவும். உருளைக்கிழங்கு அரைத்து அதன் சாறை வடிகட்டி மருக்கள் உள்ள இடங்களுக்கு மேல் தடவி வரலாம். அரை உருளைக்கிழங்கு அரைத்து அதை சாறை வடிகட்டி சிறிய டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் மட்டும் பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு இதுபோல உருளைக்கிழங்கு சாறை மருக்கள் மீது வைத்து உறங்கவும். காலையில் வழக்கம் போல் முகத்தை அல்லது மருக்களை கழுவி விடலாம். இதுபோல செய்வதன் மூலம் ஒரு வாரத்தில் மருக்கள் சுருங்கி வேரோடு விழுந்து விடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறை மருக்கள் மீது தடவி வரவும். காது குடைய பயன்படுத்தும் பட்ஸ் அல்லது காட்டன் பஞ்சுகளை பயன்படுத்தி எலுமிச்சை சாறை மருக்கள் மீது அப்ளை செய்து வரவும். இதுபோல செய்து வருவதன் மூலம் எளிதில் மருக்கள் சுருங்கி அதன்  சக்தி இழந்து கீழே விழுந்து விடும். இரவு நேரங்களில் இதுபோல மருக்கள் மீது எலுமிச்சை சாரை வைத்து தூங்கவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து ஒரு பேஸ்ட் போல ரெடி செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை சிறிதளவு அதாவது ஒரு துளிகளாக மருக்கள் மீது அப்ளை செய்யவும். இதுபோல செய்து வருவதன் மூலம் மருக்கள் விழுவதை காணலாம்.

 அன்னாசி பழம்

அன்னாசி பழத்தின் சாறை பிழைந்து மருக்கள் மீது அப்ளை செய்து வரவும். தினமும் அன்னாசிப்பழம் பயன்படுத்த முடியவில்லை என்றாலும், கிடைக்கும் பொழுது இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அன்னாசிப்பழம் கிடைக்கும் பொழுது அதன் சாறை கொஞ்சம் பிழிந்து ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் வாங்கி பிரஷ்ஷாக பயன்படுத்த முடியும் என்றால், சிறப்பாக இருக்கும். இதுபோல செய்து வருவதன் மூலம் மருக்கள் முற்றிலும் அகன்று விடும்.

இந்த நாலு பொருட்களையும் பயன்படுத்தி மருக்களை உதிர வைக்கலாம்

 நமது வீட்டு கிச்சனில் இருக்கும் வெறும் நாலு பொருட்களை ஒன்றாக  சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் எளிதில் மருக்களை உதிர வைத்து விடலாம். நான்கு சின்ன வெங்காயம், இரண்டு சூடம்,  சிறிதளவு கல் உப்பு, மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி.

எடுத்துக்கொண்ட இரண்டு சின்ன வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மைய அரைத்து அதன் சாரை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தில் இயற்கை ஆகவே நீர் தன்மை உடையதால், தண்ணீர் எதுவும் தனியாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டாம். வெங்காயத்தில் இருக்கும் நீரே போதுமானது. வடிகட்டி எடுத்துக்கொண்ட வெங்காய சாறுடன், எடுத்து வைத்துள்ள இரண்டு சீடங்களை நன்றாக நசுக்கி பவுடராக அதில் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள கல் உப்பை நன்றாக பொடியாக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி கரையும் வரை கரைத்து வைத்துக் கொள்ளவும். சால்ட் பயன்படுத்துவதை விட கல் உப்பை பொடியாக பயன்படுத்த வேண்டும். இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. கடைசியாக மஞ்சத்தூளை சிறிதளவு சேர்த்து, அதிக அளவில் சேர்க்க வேண்டாம், நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது மறுமை அகற்றுவதற்கான இயற்கை மருந்து ரெடி. இதனை மறுக்கள் உள்ள இடங்களின் மேல் மருக்கள் மீது மட்டும் அப்ளை செய்து வரவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். இந்த அளவு தான் எடுக்க வேண்டும் என்று இல்லை. ஒரு நாளைக்கு மட்டுமே வைத்து பயன்படுத்தவும். ஒவ்வொரு நாளும் செய்யும்பொழுது புதிதாக செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதனால் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு நாளைக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் மருக்கள் நீங்கி வருவதன் வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.

 கொடுக்கப்பட்டுள்ள மருக்கள் நீங்குவதற்கான இயற்கை முறை டிப்ஸ்களில் ஏதேனும் தழும்புகள் மற்றும் ஏதேனும் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருக்கள் முற்றிலும் வேரோடு விழுந்த பிறகு இந்த தழும்புகளும் அல்லது புண்களும் தோன்றலாம்.ஆனால் அது எந்த பக்க விளைவுகளையும் தராது. இருப்பினும் உங்களுக்கு ஏதேனும் தழும்புகள் மற்றும் புண்கள் வந்தால் அந்த தழும்புகள் மற்றும் பொங்கல் மீது சிறிதளவு ஆலிவ் எண்ணெயை அப்ளை செய்து வந்தால் ஒரு வாரத்தில் இந்த தழும்பும் புண்களும் முற்றிலும் அகலும். 

इस पोस्ट को दोस्तों के साथ शेयर करे:
Gowtham

Leave a Comment