Effective and natural home remedies for dark spots: உங்கள் அழகிய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற இதைவிட ஈஸியான வேற டிப்ஸ் இருக்கவே முடியாது!
பொதுவாக முகத்தில் கரும்புள்ளிகள் அதிக அளவில் பெண்களுக்கு காணப்படும். ஆண் பெண் என இரு பாலருக்குமே இருந்தாலும் பெண்களுக்கு அவை அதிக அளவில் வெளிப்படையாக தெரியும். அப்படி தெரிவது யாரும் விரும்ப மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை டிப்ஸ்கள் ஆண் பெண் இருவருக்குமே பயன்படுத்த பொருந்தும்.
சருமம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். சிலருக்கு வறண்ட சருமமாகவும் சிலருக்கு எண்ணெய் பசை நிறைந்த சருமமாகவும் சிலருக்கு சருமம் இயற்கையாகவே ஈரப் பதத்தையும் கொண்டிருக்கும் மேலும் சிலருக்கு இவை அனைத்தும் கலந்த ஒரு சருமமாகவும் இருக்கும். இது எதுவாக இருந்தாலும் இவ்வளவு வித்தியாசங்கள் நிறைந்த சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனை என்பது ஒன்றுதான் அதுதான் கரும்புள்ளிகள். சிலருக்கு முகத்தை பருக்கள் அதிக அளவில் இருக்கும். பருக்களுக்கு ஏதேனும் ட்ரீட்மென்ட் அல்லது கிரீம்கள் பயன்படுத்திய பின் அந்த இடத்தில் பருக்கள் நீங்கும் ஆனால் தன் தழும்புகளை அது விட்டு விட்டு சென்றிருக்கும். அவ்வாறு மட்டுமல்லாமல் சாதாரணமாகவே கரும்புள்ளிகள் சிலருக்கு முகங்களில் ஆங்காங்கே இருக்கும். அது அவர்களுக்கு அளவே கிடைக்கக்கூடியதாக அமைந்திருக்கும். வீட்டில் உள்ள சில எளிய இயற்கை முறை வைத்தியங்களை பின்பற்றினாலே போதும். உங்கள் அழகிய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் அகற்றி விடலாம்.
தேன்
சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தேன் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. அதுபோல சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பங்காற்றுகிறது. வெறும் தேனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மட்டும் இன்றி முகம் முழுவதும் தேய்த்து வந்தால் முகம் சிறிது நாட்களில் பொய்யுடனும் மேலும் கரும்புள்ளிகள் குறைந்தும் இருக்கும்.
தேன் சிறு துளிகள், எலுமிச்சை சாறு சில துளிகள், பாதாம் பேஸ்ட் அரை ஸ்பூன் மற்றும் பால் பவுடர் அரை ஸ்பூன், இது நான்கையும் நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் ரெடி செய்து முகம் முழுவதும் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் கொஞ்சம் அதிகமாகவும் அப்ளை செய்து வரவும். தேன்களில் உள்ள என்சைம்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்குவதோடு முகத்தை பலபலப்பாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் அதிக அளவு நெஞ்சங்கள் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. பப்பாளியை சாதாரணமாக முகத்தில் அப்ளை செய்து வந்தாலே முகம் அழகிய தோற்றத்துடன் காணப்படும். பப்பாளி பழத்தை உள்ளே உள்ள சதை பகுதியை நன்றாக வசித்தோ அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து முகத்தில் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்து அப்படியே காய வைக்கவும். பிறகு 20 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும். இது போல் தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக மறையும்.
கரும்புள்ளியை நீக்கும் கற்றாழை
கற்றாழை ஜெல்லை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொண்டு( தண்ணீர் சேர்ப்பது அவசியம் இல்லை, வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம், இயற்கையான கற்றாழையை வெட்டி பயன்படுத்தி அதன் ஜெல்லை பயன்படுத்துபவர்களுக்கு உள்ளே உள்ள கற்றாழையின் நொங்கு அல்லது கற்றாழையின் ஜெல் வாசனை பிடிக்காததால் இதுபோல பயன்படுத்திக் கொள்ளலாம். பன்னீர் சருமத்திற்கும் நல்லது)இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் மட்டும் போடலாம் இல்லையெனில் முகம் முழுவதும் போடலாம். கண்களுக்கு கருவளையம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் விரைவில் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் நீங்கும்.
தக்காளி பழம்
தக்காளி பழத்தை சாறு பிழிந்து முகத்திற்கு பயன்படுத்துவது சிறந்த டோனராக செயல்படுகிறது.தக்காளியை பச்சையாக சாப்பிடுவது சருமத்திற்கு பளபளப்பை தரும்.
தக்காளி பழத்தை நன்றாக பிழைந்து சாறு எடுத்து அதனை முகத்தில் அப்ளை செய்து வரவும். இதுபோல் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழம் இயற்கையாகவே சிறந்த பிளீச்சிங் ஏஜெண்டாக சருமத்திற்கு பயன்படுகிறது. எலுமிச்சை சாறை நேரடியாக சருமத்திற்கு உபயோகிக்க கூடாது. எலுமிச்சை சாறுடன் சம அளவு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு தண்ணீர் சேர்த்து மட்டுமே சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும். சிறிதளவு எலுமிச்சை சாறுடன் தண்ணீர் சேர்த்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து வரவேண்டும். வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை இதுபோல செய்து வந்தால் போதுமானது.
மோர்
பொதுவாக சருமத்திற்கு பலரும் தயிர் பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் மோரையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். மோரை நேரடியாக சருமத்திற்கு பயன்படுத்தலாம். கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மோரை நேரடியாக அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே காய வைத்து பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தாலும் நல்லது இல்லை என்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இது போல செய்து வந்தால் கரும்புள்ளிகள் எளிதில் மறையும்.