how to grow nails longer naturally in tamil

how to grow nails longer naturally in tamil: நீளமான மற்றும் அழகான நகங்கள் வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க! நகம் உடையாமல் நீளமாக அழகாக இருக்கும்

நம்மில் பலருக்கு பொதுவாக பெண்களுக்கு நகம் என்றால் நீளமாகவும்  அழகாகவும் இருக்க வேண்டும் என்பது ஆசை. நீளமாக நகம் வளர்த்து அதில் பலவகையான நெல் பாலிஸ்கள் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பது கனவாகவே கூட இருக்கிறது. ஆனால் பலருக்கு இதுபோல நீளமாக நகங்கள் வளராமல் இருக்கும்.  சிலருக்கு விரைவில் நீளமான நகங்கள் வளரும் ஆனால் இடையிலேயே அவை உடைந்து போகும். இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாமல் விடுவது தான்.  நீளமான ஸ்ட்ராங்கான நகங்களை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்று ட்ரை பண்ணி பாருங்க.

நகம் உடைவதற்கு முக்கிய காரணம் அதிக நேரம் நகத்தை நீரில் வைப்பது. சிலருக்கு கூந்தலை வாழும்பொழுது  நகங்களின் இடுக்கில் கூந்தல் மயிர் சிக்கி நகம் உடையும்.  சிலர்  தங்களை அறியாமலேயே ஏதேனும் ஒரு யோசனையில் நகத்தை கிள்ளி எரிந்து விடுவார்கள். சிலருக்கு எதுவும் செய்யாமலே இருந்தும் நகம்  தானாகவே ஒரு குறிப்பிட்ட  அளவை தாண்டி வளரும் பொழுது உடைந்து விடும். இவை அனைத்திற்கும் மேலாக சிலருக்கு நகம் வளரவே வளராது. நகத்தை எப்படி வளர்ப்பது எப்படி பராமரிப்பது என்பதனை இந்த கட்டுரையில் காணலாம்.

தேங்காய் எண்ணெய் 

ஒரு கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சம அளவு ரோஸ்மேரி ஆயில் மற்றும் தேன் எடுத்துக்கொண்டு லேசாக சூடு செய்து ஆரிய பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நகங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளவும். இவ்வாறு தினமும் செய்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வரவும். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் நகம் எளிதில் வேகமாக வளரும்.

ஆரஞ்சு சாறு 

ஒரு சிறிய கிண்ணத்தில் ஆரஞ்சு சாரினை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட ஆரஞ்சு சாரி உங்கள் கைகளில் விரல் நுனி அதாவது   நகங்கள் மூழ்கும் அளவு விரல்களை அந்த கிண்ணத்தில் விடவும்.

 ஆரஞ்சு சாரில் உள்ள பாலிக் ஆசிட் நகம் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் உதவியால் நகம் எளிதில் வேகமாக வளரும். தினமும் இந்த ஆரஞ்சு சார் மசாஜ் செய்து பாருங்கள்.

ஆலிவ் ஆயில்  உடன் எலுமிச்சை சாறு

ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று அல்லது நான்கு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு உங்கள்  நகப் பகுதிமூழ்கும் அளவிற்கு  விரல்களை நினைத்து அப்படியே ஒரு பத்து நிமிடம் வையுங்கள். இவ்வாறு வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் நகங்கள் ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வளரும்.

முட்டை ஓடு

 முட்டை ஓடு எளிதில் அதிக அளவில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த முட்டை ஓடு உடன் பாதாம் பருப்பு மற்றும் ஆளி விதை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பும் ஆளி விதையின் சம அளவு எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்ட மூன்றையும் நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பவுடராக எடுத்துக் கொள்ளவும். அதிக அளவு இந்த பவுடரை செய்து வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த செய்முறையை செய்யும் பொழுது மட்டும் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்கொண்ட ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் பவுடரை வெதுவெதுப்பான பசும்பாலில் கலந்து நன்றாக மிக்ஸ் செய்யவும். கைவிரல்களை மிக்ஸ் செய்த பவுடர் பாலில் நினைத்து ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு கழுவி விடவும்.

இந்த செய் முறையை மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்தால் மட்டுமே போதும் நகம் அடர்த்தியாக நீளமாக வளரும். மேலும் வளரும் நகமும் உடையாமல் பாதுகாப்பாக இருக்கும். 

அக்ரலிக் மற்றும் ஜெல் நகங்களை தவிர்க்கவும்

கைகளுக்கு அக்ரலிக் மற்றும் ஜெய் நகங்களை பயன்படுத்துவது பார்ப்பதற்கு அழகாகவும் மற்றவர்களுக்கு கவர்ச்சியாகவும் காணப்படலாம். ஆனால் இந்த  அக்ரலிக் மற்றும் ஜெல் நகமானது இயற்கையாக நகங்கள் வளர்வதற்கான தூண்டுதலை தடுக்கிறது. அதனால் எப்பொழுதாவது வேண்டுமானால் அக்ரலிக் மற்றும் ஜெல் நகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து பயன்படுத்து இது  நகங்களை முற்றிலும் அளிக்க வாய்ப்புள்ளது. நகத்தின் தரத்தை மோசம் அடைய செய்கிறது. 

பயோடின்

பயோட்டின் என்பது முடிக்கு மட்டுமல்ல நகங்களுக்கும் வளர்ச்சியை கொடுக்க உதவுகிறது. இந்த பயோடேநே பெறுவதற்கு சக்தி வாய்ந்த வைட்டமின்கள் உடைய வாழைப்பழம் மற்றும் அவகோடா மற்றும் ஏதேனும் ஒன்றினை எடுத்துக் கொள்ளலாம். இது நகங்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தூண்டுதலாக உள்ளது. பயோட்டின் சம்பந்தமான சப்ளிமெண்ட்ஸ் ஏதேனும் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் மருத்துவரின் அணுகுமுறை இல்லாமல் எடுக்க வேண்டாம். ஒரு முறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு அல்லது பூண்டு எண்ணெய்

பூண்டு எண்ணெயில் மற்றும் பூண்டில் செலினியம் சத்து  நிறைந்துள்ளது. நகங்கள் வளர்ச்சி அடைய இது  தூண்டுகிறது.பூண்டை துண்டுகளாக நறுக்கி நகங்களின் மேல் லேசாக மென்மையாக தேய்க்கவும். பூண்டு எரிச்சலை உண்டாக்கும் என்று நினைத்தால் பூண்டிற்கு பதில் பூண்டு எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம். வாரம் ஒரு முறை மட்டுமே இதை செய்து வந்தால் போதுமானது. நகம் நீளமாக உடையாமல் வளர இது உதவுகிறது. 

इस पोस्ट को दोस्तों के साथ शेयर करे:
Gowtham

Leave a Comment