sembrathi illa benefits in tamil
செம்பருத்தி ஏராளமான நன்மைகள் உள்ளது.செம்பருத்தி பூ செம்பருத்தி இலை போன்றவை மருத்துவ ரீதியாகவும் ,அழகு சார்ந்த ரீதியாகவும், ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்துவதால் இது ஊட்டச்சத்துக்கள் மிகுந்த ஒரு உணவுப் பொருளாக மாறும். இது பார்ப்பதற்கு பிரகாசமாக ஒரு உணர்வை தரும். செம்பருத்தி 100 வகையான நிறங்களில் உள்ளது.
செம்பருத்தி மரம் ஆனது ஏழு அடி முதல் 15 நீளம் வரை வளரக்கூடிய ஒரு அற்புதமான மரமாகும். செம்பருத்தி எல்லா வகை சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய ஒரு மரமாக்கும் .செம்பருத்தி இலையை பலர் வீட்டின் அழகிற்காகவும் ,கடவுளுக்கு மலராக அணிவிக்க பயன்படுத்துகிறன்றன. பல காரணங்களுக்காக செம்பருத்தி செடியை, அவர்களின் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால் செம்பருத்தி பயன் மிகவும் அதிகமானது அதை பற்றி நாம் விரிவாக காண்போம்.
செம்பருத்தி பயன்கள் மற்றும் அதன் நன்மைகள்:
செம்பருத்தி தேநீர் அருந்துவதால் உடலுக்கு புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரில் செம்பருத்தி இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின்னர் ,அதை தேனுடன் கலந்து அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது நமக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அதிகமாகவும் கிடைக்கும்.மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் உடலளவில் நல்ல சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
செம்பருத்தி நாம் தேநீரில் கலந்து அடிக்கடி பருகும் பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் அதிகமாக கிடைக்கும் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைப்பதால் தேவையற்ற நோய் கிருமி தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதய நோய் உள்ளவர்கள் செம்பருத்தி தேநீரை அதிகமாக எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு இதயம் சார்ந்த எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. இது ரத்த ஓட்டத்தினை சீராக்கும். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டங்களில் எந்தவித அடைப்பும் இல்லாமல், சீராக செல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.இது மன உளைச்சல் மற்றும் மன நிம்மதி இல்லாமல் இருக்கும் பொழுது, இந்த செம்பருத்தி தேநீரை எடுத்துக் கொள்வதால் நாம் புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியுடனும் இருப்போம் அவ்வகையில் இதய நோய் நமக்கு வராது.

முடி வளர்ச்சிக்கு பயன்படும் செம்பருத்தி இலை:
அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூவானது மிகச்சிறந்த ஒரு மருந்தாக இருக்கிறது செம்பருத்தி இலையை எண்ணையாக பயன்படுத்தலாம்.
செம்பருத்தி இலை மற்றும் பூக்களை ஹேர் பேக்காக பயன்படுத்தலாம் மற்றும் தலைகளில் ஏற்படும் தேன் இரு புண்கள் பொடுகு போன்ற அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த செம்பருத்தி இலை சிறந்த மருந்தாக இருக்கும்.
செம்பருத்தி பூக்களை நன்றாக வெயிலில் காயவைத்து பின்னர் அதை நாம் செக்கில் எடுத்த தேங்காய் எண்ணெயில் அதை, நன்றாக ஊற வைத்து தினமும் அதை நாம் தலைமுடி ஈறுகால்களில் நன்றாக தேய்த்துக் கொண்டு வரும்போது தலைமுடி வளர்ச்சியானது விரைவில் நடக்கும்.

தலைமுடியில் இரு பேனு பிரச்சனை உள்ளவர்கள் இந்த செம்பருத்தி இலையை வெயிலில் காயவைத்து அல்லது செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து தலையில் ஒரு 30 நிமிடம் வைத்து தலைையை அலாசும் பொழுது பேன் மற்றும் ஈறு பிரச்சனையானது விரைவில் குறையும்.
ரசாயனம் கலந்த ஷாம்புகளை பயன்படுத்தும் போது தலைமுடியில் புண் மற்றும் அரிப்பு ஏற்படும். அரிப்பு மற்றும் புண்களை தவிர்ப்பதற்கு செம்பருத்தி இலையின் ஷாம்புவை பயன்படுத்தலாம். அது நம் வீட்டிலேயே செய்யலாம். செம்பருத்தி இலை மற்றும் பூந்திக்கொட்டை போன்றவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனை நாம் ஷாம்புக்கு பதிலாக தலையில் தேய்த்து குளித்து வரும்பொழுது தலைமுடி பிரச்சனைகள் விரைந்து குறையும் ரசாயனம் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவதால் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் செம்பருத்தி இலைகளை நன்றாக தலையில் தேய்த்து குளித்து வரும் பொழுது பொடுகு பிரச்சனையானது விரைவில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் உதவியாக இருக்கும் வாரம் மூன்று முறை இந்த செம்பருத்தி பயன்படுத்தி தலையை அலசி கொண்டு வரும் பொழுது தலைமுடி சார்ந்த அனைத்து வித பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.
உடலை குளிர்ச்சி அடைய செய்யும் செம்பருத்தி:
உடல் சூடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் நாம் உடம்பில் போதுமான அளவு தண்ணீர் சத்து இல்லாதது நாம் அனைவரும் அவரவர் உடல் எடைக்கு ஏற்ப மூன்று லிட்டர் எழுத்து 4 லிட்டர் வரை தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலின் பலவித பிரச்சனைகள் நமக்கு வரும்.
அதில் முதன்மை பிரச்சினையாக சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீரக அடைப்பு போன்ற பலவித பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும் இப்ப பிரச்சனைகளை தவிர்ப்பது நாம் உண்ணும் உணவில் சரியான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் பல சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செம்பருத்தி தேநீர் போன்ற அமிர்தம் போன்ற உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதால் இவ்விதப் பிரச்சினைகளில் இருந்து நாம் எளிதில் விடுபடலாம்
உடல் எடையை குறைக்கும் செம்பருத்தி இலை:
நம் உடம்பில் 23 சதவீதம் கொழுப்பினை குறைப்பதற்கு செம்பருத்தி இலை மிகவும் உதவியாக இருக்கிறது செம்பருத்தி இலையை நாம் உண்ணும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நாம் மலம் வழியாக வெளியேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது செரிமான சக்தியை அதிகரிக்கும் பொழுது வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது இந்த செம்பருத்தி இலை.