How to cure mouth odour: வாய் துர்நாற்றம் தாங்கவில்லையா? மற்றவரிடம் பேசுவதற்கு தர்ம சங்கடமாக உள்ளதா? வாய் துர்நாற்றத்தை துரத்தியடிக்க இதை செய்யுங்கள்
வாய் துர்நாற்றம் வீசுகிறது. உங்களுடைய கருத்தை மற்றவர்களிடம் கூறுவதற்கு தயக்கமாக உள்ளதா? மற்றவர்களிடம் பேசுவதற்கு வாய் துர்நாற்றம் காரணமாக தயங்குகிறீர்களா? முதலில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அதற்கான தீவினை காணலாம்.
வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று அதிக அளவில் நம்மிடம் அக்கறை எடுத்து கூறுவது நம் பெற்றோர்கள். அவர்கள் எப்படி கூறுவார்கள் என்றால் “வாய் துர்நாற்றம் வீசுகிறது பல் சரியாக துலக்கவில்லையா?”இன்று தான் கேட்பார்கள். வாய் துர்நாற்றம் வீசுவதற்கு பல் சரியாக துலக்காமல் இருப்பது ஒரு காரணம் அல்ல. நன்றாக பல்துலக்கினாலும், வெவ்வேறு பேஸ்ட்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்காது, ஏனெனில் வாய் துர்நாற்றம் வீசுவதற்கு வாயில் உள்ள பற்கள் மட்டும் காரணம் அல்ல. அதையும் தாண்டி வயிற்றில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது வாயில் துர்நாற்றம் வழியாக அறிகுறி கொடுக்கும்.
வாய் துர்நாற்றம் வீச காரணங்கள்
வாய்ப்புண் அல்லது வயிற்றில் புண்,அல்லது வயிற்றில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் வீசும்.
புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்துக் கொள்வதனாலும் வாய் துர்நாற்றம் வீசும்.
வயிற்றில் அல்சர் பிரச்சனை இருந்தால் வாய் துர்நாற்றம் வீச வாய்ப்புண்டு.
பத்து சதவீதம் பேருக்கு கல்லீரல் பிரச்சனை, நீரிழிவு பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை போன்ற பிரச்சனைகளாலும் வாய் துர்நாற்றம் வீசும்.
இரைப்பை உணவு குழாய் நோய் வாய் துர்நாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். வயிற்றில் உள்ள அமிலமானது உணவு குழாய்க்குள் திரும்புவதால் தொண்டை மற்றும் நெஞ்சில் ஏதேனும் எரிச்சல் உண்டாகும். இதனால் வாய் துர்நாற்றம் வீசுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். கடினமாக உள்ள ஏதேனும் பிரஷ்களை கொண்டு வேகமாக நாக்கே அழுத்தக்கூடாது. இது நாக்குகளில் உள்ள சுவை அரும்புகளை ஏதேனும் டேமேஜ் செய்யும்.
பற்களிலோ அல்லது பற்களின் வேர்களிலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தாலும் சொத்தைப்பல் இருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும். வயிற்றுக்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனால் பள்ளிலோ அல்லது பற்களின் வேர்களிலோ ஏதேனும் வழி அல்லது பிரச்சனை இருந்தால் உங்களால் அதை உணர முடியும். அதனால் உடனே மருத்துவரை அணுகவும்.
பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளில் அதிக அளவு சல்பர் உள்ளன. முட்டை, மீன், இறைச்சி, போன்றவற்றில் அதிக அளவில் புரதங்கள் நிறைந்துள்ளன. இவைகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன.
காபி, டீ, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை, ஜூஸ் வகைகள் போன்றவற்றிலும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்குகின்றது.
வாயில் உள்ள மீத உணவுகள் பல் இடுக்குகளில் இருக்கும், மேலும் வாயில் உள்ள பல பாக்டீரியாக்கள் ஆகியன சேர்ந்து வாய் துர்நாற்றத்தை உருவாக்கும். அதனால் சாப்பிட்டு முடித்த பிறகு தண்ணீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.
வாய் துர்நாற்றத்தை போக்க வழிமுறைகள்
வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை எளிதில் முழுமையாக போக்க முடியாது. ஆனால் பெருமளவு குறைக்க முடியும். தொடர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள சில யோசனைகளை பின்பற்றுவதன் மூலம் வாயும் துர்நாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக போக்கலாம்.
தினமும் காலை மாலை என இருவேளை பல் துலக்க வேண்டும்.
அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வாயில் உள்ள பாக்டீரியாக்களும், மீத உணவுகளும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் தண்ணீர் அதிக அளவு குடிக்கும் பொழுது இந்த தண்ணீர் மூலமாக அந்த பாக்டீரியாக்களும் மீத உணவுகளும் அகன்று விடும். இதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.
கிரீன் டீ அல்லது பிளாக் டீ ஆகியவற்றினால் வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி கொப்பளிப்பதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வாய் துர்நாற்றம் குறைவதாக சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பபுள்கம், மிட்டாய் சாப்பிடலாம். மிட்டாய் மற்றும் வடிவம் சாப்பிடுவதனால் அதிக அளவில் வாயில் எச்சில் சுரக்கும். இத வறண்டு போகாமல் இருக்கும். இவற்றை சாப்பிடுவதனால் உருவாகும் புதிய எச்சில்கள் மூலம் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு டிப்சை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும்.

பழங்களும் காய்கறிகளும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். காலை முதல் சாப்பிடாமல் இருந்தால் வாய் வரண்டு போய் எச்சில் சுரக்காமல் இருக்கும். இதனால் பழைய பாக்டீரியாக்கள் அதிக அளவில் ஒன்று கூடி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் சாப்பிடாமல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிகமாக கூடும்.
தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். நாக்கின் சுவை அரும்புகளில் உள்ள பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை உண்டாகும். அதனால் தினமும் நாக்கை கடைகளில் விற்கும் டங் கிளீனர் பயன்படுத்தியோ அல்லது ஏதேனும் பிரஷ் பயன்படுத்தியோ நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். இவற்றை பயன்படுத்தும் போதும் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சுவை நரம்புகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இவற்றை பயன்படுத்தும் போது கவனமாகவும் மெதுவாகவும் பயன்படுத்த வேண்டும்.
சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. உணவு உண்ட பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தூங்க செல்ல வேண்டும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளோ அல்லது ஏதேனும் உணவு வகைகளோ எடுத்துக் கொள்ளலாம்.
வெங்காயம் மற்றும் பூண்டு என்பதே தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை முற்றிலுமாக தவிர்க்க முடியாது, எனினும் பச்சையாக வெங்காயம் சாப்பிடுவதையோ பூண்டு எடுத்துக் கொள்வதையோ தவித்துக் கொள்ளலாம்.
சிட்ரஸ் பலன்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு போன்றவற்றை உண்ணும் பொழுது அதன் புளிப்பு காரணமாக வாயில் அதிக அளவில் எச்சில் சுரக்கும். வெற்றி நீங்கள் பணம் சாப்பிடும் போதே உணர்ந்திருக்கலாம். இதன் மூலம் வாய் வறண்டு போகாமல் எச்சில் சுழன்று கொண்டே இருப்பதால் வாய் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
டீ ட்ரீ ஆயில் அதிக அளவு ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அதனால் பல்துலக்கும் பொழுது நீங்கள் நாள்தோறும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் உடன் சிறிதளவு டீ ட்ரீ ஆயிலையும் சேர்த்து பல் துலக்க வேண்டும். இதனால் வாய் புத்துணர்ச்சியோடு இருப்பதோடு, துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
புதினா மற்றும் துளசி ஆகிய இரண்டும் நல்ல வாய்ப்புள்ள மாற்றத்தை அளிக்கக்கூடிய இலைகள். தினமும் இரண்டு புதினா அல்லது இரண்டு மூன்று துளசி என்று உங்களுக்கு ஏற்ப வாயில் போட்டு மெல்லுங்கள். இவற்றை விழுங்கினாலும் நல்லது தான். பிடிக்கவில்லை என்றால் மென்று விட்டு துப்பி விடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
சீரகம் மற்றும் சோம்பு ஆகியவை உட்கொள்ளலாம். சீரகம் செரிமானத்திற்கு நல்லது எனினும் அவ்வப்போது ஒரு டீஸ்பூன் சோம்பு அல்லது சீரகத்தை வாயில் போட்டு மென்று வருவதனால் அப்போதைய நேரத்தில் வாய் துர்நாற்றம் பேசாமல் இருக்கும்.