How to get glow skin in 7days using home remedies in tamil

How to get glow skin in 7days using home remedies: வெறும் ஏழு நாட்களில் உங்கள் முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் மாறணுமா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க! நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

அழகான மற்றும் பளபளப்பான முகம் இருக்க வேண்டும் என்பது அனைத்து ஆண் பெண்களுக்கும் ஒரு கனவாகவே இருக்கும். உங்கள் கனவை நினைவாக்க வெறும் ஏழு நாட்களே போதும்.உங்கள் முகம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கு விலை உயர்ந்த மற்றும் ரசாயனங்கள் நிறைந்த எந்த ஒரு  கிரீம்களும் தேவைப்படாது. வீட்டில் கிடைக்கக்கூடிய அன்றாட சில பொருட்களை வைத்து உங்கள் முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம்.  வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கை பொருட்களை பயன்படுத்துவதனால் எந்த ஒரு  பக்கவிளைவுகளும்  இருக்க வாய்ப்பில்லை. எனினும்  இயற்கை பொருளாகவே இருந்தாலும் சில பொருட்கள் சிலருக்கு  ஒத்துக் கொள்ளாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சருமத்தை கொண்டுள்ளதால் ஏதேனும் மாறுபாடுகள் இருக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை செய்து பாருங்கள், அவை ஒரு முறை பயன்படுத்திய பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இல்லை என்றால் மறுமுறை அவற்றை பயன்படுத்த வேண்டாம். 

 சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்கள் சருமத்திற்கு எந்தெந்த பொருள் ஏற்றது எந்தெந்த பொருள் ஏற்றுக்கொள்ளாமல் அலர்ஜியை தரும் என்பது தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு சில இயற்கை  பொருட்கள் எப்பொழுதும் பயன்படுத்தி இருந்தாலும் சில சமயங்களில் அதே பொருள் அவர்களுக்கு ஏதேனும் ஒரு அலர்ஜியையோ அல்லது ஏதேனும் ஒரு துன்பத்தையோ கொடுக்கும். அதற்கு காரணம் அன்று அவர்கள் சாப்பிட்ட ஏதேனும் உணவு அல்லது ஏதேனும் பானங்களோ கூட ஒரு காரணமாக இருக்கலாம். 

How to get glow skin in 7days
home remedies to remove scars naturally

சிலருக்கு எவ்வளவு மேக்கப் போட்டாலும் முகம் அழகாக தெரிந்தாலுமே கூட முகம் பார்ப்பதற்கு பளபளப்பாகவோ அல்லது பொலிவாகவோ இருக்காது. சில மேக்கப் எதுவும் போடாமலேயே சாதாரணமாக பார்ப்பதற்கு அவர்களின் முகம் பளபளப்பாக இருக்கும். இதற்குக் காரணம் அவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் சில இயற்கையான பொருட்கள் மட்டுமே. இவை மூலம் நம்முடைய முகம் ஈரப்பதத்துடன் இருப்பதனால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக தோற்றமளிக்கும். இனி நீங்களும் உங்கள் வறண்ட சருமத்தை இன்னும் மெருகேற்றி அழகாக பளபளப்பாக மாற்றலாம்.

How to get glow skin in 7days

காலையில் எழுந்த உடனும் இரவு படுப்பதற்கு முன்பும், மேலும் இடையில் பல நேரங்களில் முகத்தை கழுவும் பழக்கம் உண்டு. இதிலும் சில முகத்தை கழுவும் போதெல்லாம் சோப்பு பயன்படுத்துகிறார்கள். அடிக்கடி சோப்பு கொண்டு முகம் கழுவுவதனால் முகத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதம் அழிந்து, வறண்ட ஒரு சருமத்தை உருவாக்குகிறது. இவ்வாறு நடப்பதனால் நீங்கள் எவ்வளவு விலை உயர்ந்த கிரீம்களை போட்டுக் கொண்டாலும் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிர ஒரு பளபளப்பு இல்லாமல் காட்சி அளிக்கும். இதனால் அடிக்கடி சோப்பு கொண்டு முகம் கழுவுவதே தவித்து விடுங்கள். முடிந்தவரை சோப் இல்லாமல் அல்லது சோப்பு பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் இரவு தூங்குவதற்கு முன்பும் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி முகத்தை கழுவும்.

 முகத்தை கழுவிய பிறகு துடைப்பது வழக்கம் தான். முகத்தில் உள்ள ஸ்கின்  மிகவும் மென்மையானது.அவற்றை கடுமையான துணிகளை கொண்டு வேகமாக துடைக்க கூடாது. சிறிய காட்டன் துணிகளை வைத்து முகத்தை ஒத்தி எடுக்க வேண்டுமே தவிர, வறட்டு வறட்டு என்று தேய்க்கக்கூடாது. இது சருமத்தை பொலி விளக்க செய்கிறது. மேலும் சருமத்தை சேதம் அடைய வைக்கிறது. முகத்தில் பல பீல் மாஸ்க் பயன்படுத்துவார்கள் ,பீல் மாஸ்க் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது சருமத்திற்குள் வெடிப்பை ஏற்படுத்துகிறது.. சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்  பசையை செயல் இழக்க வைக்கிறது.

  ஏசி பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவும் அல்லது குறைத்துக் கொள்ளவும். தற்பொழுதெல்லாம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் காலை முதல் இரவு  தூங்கும் நேரம் வரை முழுவதுமாக ஏசியில் இருக்கிறார்கள். அப்படி இருப்பதை தவிர்க்க முடியாது ஆனால் குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். ஏனெனில்  நாள் முழுவதும் ஏசியில் இருப்பதனால் முகத்தில் உள்ள தோல் வறட்சியடைகிறது மந்தமாக செயல்படுகிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் ஏசி இல் இருப்பதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மேலும் சருமத்தை வறட்சி அடைய வைத்து இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி முகப்பொலிவை இழக்க வைக்க செய்கிறது.

இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கடலை மாவை ஒரு சின்ன பவுலில் அல்லது கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிதளவு  பசும்பால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பசும் பால் கிடைக்கவில்லையெனில் பசுந்தயிரோ அல்லது சாதாரண தயிரோ சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த கடலை மாவு பேஸ்ட்டை  முகம் மற்றும்  கழுத்துப் பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து லேசாக தண்ணீர் தெளித்து காய்ந்திருக்கும் கடலை மாவு பேஸ்ட் ஈரப்பதம் ஆக்கி முகத்தில் ஒரு ஸ்க்ரப்பர் போல் தேய்த்து பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும். கடலை மாவு பயன்படுத்திய பிறகு சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவ தேவையில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்தால் பலன் எளிதில் கிடைக்கும். தினமும் செய்து வந்தாலும் வெகு விரைவில் முகத்தில் ஒரு தெளிவினை காணலாம்.

பச்சைப்பயிறு மாவாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது பச்சை பயிறு அரைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்ட இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அதை எடுத்துக்கொண்ட பச்சை பயிறு  மாவை 3 அல்லது 4 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் சிறிதளவு தண்ணீர் அல்லது தயிர் சேர்த்துக் கொள்ளலாம். கெட்டியாக ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் அளவு ரெடி செய்து கொள்ளவும். இந்த மாவை முகத்தில் அப்ளை செய்து 20 அல்லது 25 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவும். சோப் போட்டு கழுவ தேவையில்லை. இந்த பச்சை பயறு மாவு முகத்திற்கு போட்டுக் கொண்டால் முதல் நாளிலேயே முகம் பளிச்சன பளபளவென காட்சியளிக்கும்.வாரம் நான்கு முறை அல்லது தினமும் பயன்படுத்தினால் ஒரு மாதத்திற்குள் சூப்பரான ரிசல்ட்டை பார்க்கலாம். 

इस पोस्ट को दोस्तों के साथ शेयर करे:
Gowtham

Leave a Comment