Easy method for curing pimples naturally: முகத்தில் உள்ள பருக்கள் உங்கள் அழகை கிடைக்கிறதா? ஒரே இரவில் முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
முகம் பார்ப்பதற்கு அழகாய் மட்டும் இருந்தால் போதுமா? பருக்கள் இல்லாமல் ஆரோக்கியமான முகப்பொலிவு வேண்டாமா? நிச்சயம் வேண்டாம் என்று யாரும் கூற மாட்டார்கள்.அனைவரும் ஆசைப்படுவது முகம் பார்ப்பதற்கு அழகாய் மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.முகத்தில் இருக்கும் பருக்கள் முக அழகை கெடுப்பதுடன் வலியும் தரும், மேலும் அந்த முகப்பரு சற்று நாள்கள் கழித்து தழும்பாகம் மாறக்கூடும். சிலருக்கு மாத கணக்கு ஆகியும் முகப்பரு போகவே போகாது.
விளம்பரங்களை பார்த்து பல கெமிக்கல் நிறைந்த கிரீம்களை ப்ளே செய்து பார்த்தும் எந்த பலனும் இல்லை என்பவர்களா நீங்கள்? கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்களை நிரந்தரமாக விரட்டுங்கள்.
நமக்கு ஏதேனும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை எப்படி தீர்ப்பது என்று யோசிப்பதற்கு முன்பு, அந்த சரும பிரச்சனை ஏற்பட காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டாலே போதும். காரணத்திற்கான தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடலாம். முகப்பருக்கள் வருவதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொண்டு பிறகு அவற்றை சரி செய்வதற்கான தீர்வை கண்டுபிடிங்கள். முகப்பரு வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
முகப்பருக்கள் வருவதற்கான காரணங்கள்
- முகப்பரு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஒரு தடவை அல்லது முதல் முகப்பரு வரும் பொழுது அது நமது முக அழகை கெடுக்கிறது என்பதற்காக அந்தப் பருவை கிள்ளி விடுவது அல்லது பருவை உடைத்து விடுவது என்று செய்வார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. ஏனென்றால் அந்தப் பருவில் இருந்து வெளிவரும் தண்ணீர் மற்ற இடங்களில் பட்டால் அந்த இடத்திலும் முகப்பருக்கள் புதிதாக உருவாகும். அதனால் முகப்பருக்களை கிள்ளி விடுவதோ உடைப்பதோ கூடாது. தானாக உடைந்தாள் அல்லது தெரியாமல் கைபட்டு உடைந்தால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்வி சரியானது தான். தானாக உடைந்தாலோ அல்லது தெரியாமல் கைத்தறி உடைந்தாலோ அதிலிருந்து வரும் தண்ணியை கைகளால் தொடக்கூடாது அல்லது கைகளால் துடைக்க கூடாது. ஒரு துணியை எடுத்து அந்த பதிவின் மேல் அப்படியே சில நொடிகள் அழுத்தி வைக்க வேண்டும். அதில் இருக்கும் நீர் வேறு எங்கும் முகத்தில் படாத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் எளிதில் வரும். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு தான் முகப்பருக்கள் வரும் என்று கூறுவார்கள். ஆனால் இதில் ஆழ்ந்த உண்மை என்னவென்றால் நம் முகத்தில் சுரக்கும் எண்ணையானது இயற்கை முறையில் சுரக்கப்பட்டிருந்தால் அப்படி ஒரு சருமம் உடையவர்களாக இருந்தால் முகப்பருக்கள் எளிதில் வராது. வந்தாலும் விரைவில் எந்த ஒரு தழும்பும் இன்றி மறைந்துவிடும். ஆனால் வறண்ட முகம் கொண்டவர்களாக உள்ளவர்கள் ஈரப்பதத்தை உருவாக்குவதற்காக மாய்ஸ்ரைசரோ அல்லது வேறு ஏதேனும் பொருளை முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் உண்டாகும் எண்ணெய் பசை கொண்ட சருமத்தை உடையவர்களாக இருந்தால் நிச்சயமாக அதிக அளவில் முகப்பருக்கள் வரும்.
- அதிக எண்ணெய் நிறைந்த ஏதேனும் பலகாரங்களோ அல்லது உணவு வகையோ சாப்பிடும் பொழுது முகப்பருக்கள் வரலாம்.
- சுகாதாரம் தூய்மை இல்லாத நீர் பயன்படுத்துவதாலோ, மற்றவர் உபயோகித்த சோப்பை பயன்படுத்துவதாலோ, அல்லது முகப்பருக்கள் அதிகம் கொண்ட ஒருவர் பயன்படுத்திய டவளை வாங்கி பயன்படுத்தினாலோ முகப்பருக்கள் வரலாம்.
- மலச்சிக்கல் அல்லது பொடுகு தொல்லை போன்றவற்றை கொண்டவர்களா நீங்கள்? உங்களுக்கு கண்டிப்பாக முகப்பருக்கள் தோன்ற வாய்ப்புள்ளது.
- முகத்தில் படியும் அதிகப்படியான அழுக்குகள் ஒரு காரணமாகும்
- மாதவிடாய் காலத்தில் நடக்கக்கூடிய ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு முகப்பருக்கள் அதிக அளவில் உருவாகும்.
- அதிகமாக வெளியே செல்வதன் மூலம் வெளியில் இருந்து வரும் புகை அல்லது மாசு காரணமாக முகத்தில் உள்ள சிறு துவாரங்கள் மாசுக்களாலோ அல்லது தூசுக்களாலும் அடைக்கப்படுவதன் மூலம் அவை பருக்களாக உருவாகலாம்.
முகப்பருக்களை முற்றிலும் அகற்றக் கூடிய சில இயற்கை முறைகள்:
தக்காளிப் பழம்
சருமத்தை தங்கமாக மாற்றும் திறன் கொண்டது தக்காளிப் பழம். முகத்தை நன்றாக தூய்மையான நீரில் தூசு மாசு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். தூய்மையான ஒரு துணியை பயன்படுத்தி முகத்தை துடைக்கவும். ஒரு தக்காளி பழத்தை எடுத்துக்கொண்டு நன்றாக மசித்து முகத்தில் முழுமையாக அப்ளை செய்யவும். ஐந்து முதல் பத்து நிமிடம் வரை நன்றாக கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யவும். பிறகு 20 அல்லது 25 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும். சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவ்வாறு தினமும் அல்லது நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செய்து வந்தால் முகப்பருக்கள் குறையும் மேலும் பருக்கள் வராமல் தடுக்கும்.
வாழைப்பழத்தின் தோலும் பசு மாட்டின் பாலும்
வாழைப்பழத்தின் தோலுடன் சிறிதளவு பசும்பால் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து ஒரு பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவி துடைத்து விட்டு பிறகு இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்யவும். கீழிருந்து மேல் நோக்கி நன்றாக மசாஜ் செய்யவும்.

பிறகு ஒரு 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நேரினால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்பொழுது பருக்கள் நீங்கி முகம் பொலிவுடன் தோன்றும்.
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்து மிக்ஸியில் போட்ட அரைத்து பேஸ்ட் ஆக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பருக்கள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும். முகம் முழுவதும் அப்ளை செய்தாலும் நல்ல பலனாக தரும். அப்ளை செய்த பின் 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இந்த வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் நல்ல ரிசல்ட்டை தரும்.

இந்த வெள்ளரிக்காய் பேஸ் பேக்கை வெறும் வெள்ளரிக்காய் மட்டும் பயன்படுத்தலாம். அல்லது வெள்ளரிக்காயுடன் அரை தக்காளி அல்லது ஒரு முழு தக்காளி சேர்த்து அரைத்தும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயுடன் சிறிது பப்பாளி பழம் சேர்த்து அரைத்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் பருக்கள் நீங்கி பளபளப்பான முகத்தையும் பெறலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு பிழிந்து தண்ணீர் கலக்காமல் முகத்தில் உள்ள பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் காது குடையும் பட்சை பயன்படுத்தி வைக்கவும். பட்சை ஒரு முனையை எலுமிச்சை சாறில் தொட்டு அதை முகத்தில் உள்ள பருக்கள் மேல் வைக்கவும். முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டாம். சிறிது நேரம் கழித்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து ஐஸ் கட்டியால் மசாஜ் செய்யவும்.

அல்லது ஐஸ் கட்டியை எலுமிச்சை சாறு தொட்டு வைத்த பருக்களின் மேல் வைத்து வைத்து எடுக்கவும். பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும்.