How to turn grey hair into black permanently naturally in tamil : ஒரே நாளில் இளநரையை நிரந்தரமாக கருமையாக்கும் இயற்கை ஹேர் டை! ட்ரை பண்ணி பாருங்க! நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
கூந்தல் பிரச்சனை பலருக்கு அதிகமாக உள்ளது. அவற்றைக் கூட சமாளித்து விடலாம் ஆனால் இந்த இளநரைப் பிரச்சனையே நிரந்தரமாக போக்க ஒரு வழி இல்லையா? என்று கேட்டால் நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு உள்ளது.
அக்காலத்தில் நம்முடைய பாட்டி தாத்தா என நம் முன்னோர்களுக்கு 50 வயது அல்லது 60 வயதை தாண்டிய பிறகு காதோரத்தில் லேசாக ஒரு வெள்ளை முடி வெட்டி பார்க்கும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களுக்கு வயதாகி விட்டதோ என்று நினைப்பார்கள். ஆனால் இப்பொழுது ஐந்து அல்லது பத்து வயது நிரம்பாத குழந்தைகளுக்கு கூட இளநரை வந்து விடுகிறது. இளநரை வருவதற்கு இதுதான் காரணம் என நிச்சயிக்கப்பட்ட ஒரு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இளநரைக்கு பல காரணங்கள் உள்ளன. அதற்கான காரணத்தை சரியான முறையில் கண்டறிந்து விட்டால் எளிதாக இளநரையை விரட்டி விடலாம். இவற்றில் மிக முக்கியம் என்னவென்றால் இளநரை வரத் தொடங்கிய முதல் நிலையிலேயே அவற்றை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை தேட வேண்டும்.
இளநரைக்காண காரணங்கள்
இளநரைக்கு முதலில் முக்கிய காரணம் என்னவென்றால், நம்முடைய பரம்பரையில் யாருக்காவது இளநரை இருந்திருந்தால், அவை படிப்படியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இளநரை வருவதற்கான ஒரு காரணமாக அமைகிறது.
கூந்தலுக்கு தேவையான மற்றும் சரியான பராமரிப்பு கொடுக்கவில்லை என்றாலும் இளநிறை வர வாய்ப்பு உண்டு.
தலை குளிப்பதற்கு நாம் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வெவ்வேறு வகையான ஷாம்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவதனாலும், அதிக ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவதாலும் இளநரைக்கு ஒரு காரணமாக அமைகிறது.
இவை அனைத்தையும் விட இளநரைக்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து பற்றாக்குறை.நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இளநரை வருவதற்கு ஒரு முக்கிய காரணம்.
நம் உடம்பில் கபம், பித்தம், வாதம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்கும் பொழுது எந்த ஒரு நோய் நொடியும் அண்டாது என்று சித்தர்களின் வாக்கு கூறப்பட்டுள்ளது.இம்மூன்றில் பித்தம் அதிகரிக்கும் பொழுது முடி நரைக்க ஆரம்பம் ஆகிறது. நாம் ஒன்றும் உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்தால் பித்தம் அதிகரிக்காமல் முடி நரைக்காமல் தடுக்க முடியும்.
எண்ணெய் குளியல்
அந்தக் காலத்தில் வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை யாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். ஆனால் இப்பொழுதோ வேலையின் காரணமாக எண்ணெய் தேய்த்து குளிக்கவே மறந்து விட்டார்கள்.
வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க முடியவில்லை என்றாலும், மாதம் இருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க இயலாதவர்கள் தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி உச்சங்களை ஊற்றி நன்றாக ஆவி பறக்க கைகளால் தேய்த்தால் உடலில் உள்ள உஷ்ணம் குறையும். இதனால் இளநரையின் தாக்கம் குறையும்.
பீட்ரூட் சாறு
ஒரு பீட்ரூட்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக கட் செய்து அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அழைத்து எடுத்துக் கொண்ட பீட்ரூட்டை வடிகட்டி அதன் சாரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். எடுத்துக்கொண்ட சாரி முடியின் வேர் பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் கழித்து தலையை ஷாம்பு இல்லாமல் தேய்த்து குளிக்கவும்.
பீட்ரூட் சாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்து வந்தால் முடி நாளடைவில் சிவப்பு நிறமாக மாறும். சில மாதங்கள் இவற்றை சரியான முறையில் பின்பற்றி குளித்து வந்தால் இரண்டு மாதத்திற்கு உள்ளாகவே முடி நாளடைவில் கருமை நிறமாக மாறும்.
மருதாணி
இளநரை என்றாலே அல்லது வெள்ளை முடி என்றாலே அதை போக்குவதற்கு யோசிக்கும் பொழுது அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது மருதாணி. மருதாணியில் இயற்கையாகவே சிவக்கும் தன்மை உள்ளது. மருதாணியை தலைக்கு தேய்த்து குளிக்கும் பொழுது முடி நாளடைவில் இளநரை மறைந்து பிரவுன் அல்லது கோல்டன் நிறமாக மாறும். நாளடைவில் இதுவே மறைத்து கருமை நிறமாக மாற்றும். வெறும் மருதாணி பொடி அல்லது மருதாணி இலையை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசி வந்தால் இளநரை மறையும். இந்த செய்முறையானது தலைமுடி 50 சதவீதம் மட்டும் இளநரையுடன் இருப்பவர்களுக்கு உதவும்.அதிக நரை உள்ளவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் உதவும்.
செய்முறை
மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மஞ்சள் கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள், நான்கு நெல்லிக்காய், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, நான்கு அல்லது ஐந்து செம்பருத்திப்பூ, ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலை, சிறிதளவு கற்றாழை, ஒரு எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி. ஆகியவற்றை நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
இதை பயன்படுத்தி தலை குளிப்பதற்கு முதல் நாள் இரவே இவற்றை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நன்றாக கிளரி விடவும்.இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்த இந்த கலவையை, மறுநாள் காலை முடியின் வேர் பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குளிர்ந்த நீரினால் நன்றாக தலையை அளசவும். ஷாம்பு எதுவும் பயன்படுத்தத் தேவையில்லை.
இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் நிச்சயம் நரைமுடி கருமை நிறமாக மாறுவதோடு, முடி ஆரோக்கியமாகவும் அடர்ந்த கருமை நிறத்துடனும் மாறும். மேலும் முடி நரைக்காமல் இவை பாதுகாக்கும்.
மருதாணியும் டீ தூளும்
உங்கள் முடிக்கு ஏற்றவாறு ஒரு கப் அல்லது இரண்டு கப் மருதாணி பொடியை எடுத்துக் கொள்ளவும். அல்லது மருதாணி இலையை காய வைத்து அரைத்து எடுத்துக் கொண்டாலும் சரி. அல்லது பச்சை மருதாணி இலையை எடுத்து அரைத்து பயன்படுத்தினாலும் சரி. இவற்றுள் ஏதேனும் ஒரு வகையான மருதாணி பவுடரை எடுத்து அதனுடன் ஐந்து அல்லது ஆறு டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து மாவு பதம் போல் மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை இந்த மருதாணி டீத்தூள் கலவையுடன் ஒரு எலுமிச்சம் பழத்தை நன்றாக பொழிந்து இதனுடன் மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு தலை முடியின் நுனிப்பகுதி முதல் வேர் பகுதி வரை நன்றாக அப்ளை செய்து 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்து பிறகு குளிர்ந்த நீரினால் தலையை அலசவும். சைனஸ் மற்றும் உடலில் ஏதேனும் குளிர்ச்சி சம்பந்தமான பிரச்சினை உடையவர்கள், எலுமிச்சை பழத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளவும்.
அவுரி இலை பொடி
மருதாணி தேய்த்து குளித்த முடியை நன்றாக காய வைத்து பிறகு அவுரி இலை பொடியை வெறு வெறுப்பான நீருடன் கலந்து ஒரு பேஸ்ட் போல் ரெடி செய்து வைக்கவும். இந்த அவுரி இலை பொடி பேஸ்ட்டை நீரில் கலந்த சிறிது நேரத்தில் கரும் பச்சை நிறத்தில் காணப்படும். இந்தக் கரும் பச்சை நிறத்தில் இருக்கும் பொழுதே இந்த பேஸ்ட்டை தலையில் தேய்க்கவும். வெதுவெதுப்பான நீரில் பயன்படுத்துவதால் அவ்வளவு சூடாக இருக்காது. இவை கருப்பு நிறத்தில் மாறுவதற்குள் தேய்க்கவும். கருப்பு நிறமாக மாறும்பொழுது இந்த பேஸ்ட் ஆனது உங்கள் தலைமுடியில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த கருமை நிறம் முடியில் ஒட்டும்.