things you should follow in winter for skin care treatment: தவறுதலாக கூட குளிர்காலத்தில் இந்த ஐந்து விஷயங்களை சேர்க்க வேண்டாம்! இது உங்கள் சருமத்திற்கு ஆபத்தை தரும்!
குளிர் காலம் வந்துவிட்டது என்பது பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால் இது போன்ற நேரத்தில்தான் சருமம் பல பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்படுகின்றது. இந்தக் குளிர் நேரத்தில் தான் உங்கள் சருமத்தை பாதுகாப்பது சற்று அதிக வேலையாக இருக்கும். அதிலும் வறண்ட சருமத்தை உடையவர்களாக இருந்தால், மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற நேரத்தில் சருமம் ஈரப்பதம் இழந்து வறண்டு, எரிச்சலை உண்டாக்கும். வெயில் காலத்தில் சில பொருட்களை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவும். அவை என்னென்ன பொருள் என்பதனை காணலாம்.
பால்

இயற்கையாகவே நாம் பயன்படுத்தும் சில இயற்கை வீட்டு முறை அழகு குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு பொருளாக விளங்குவது பால். பசும்பால் சருமத்திற்கு மிகவும் நல்லது அதிக பொலிவை கொடுக்கும் ஒரு பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் குளிர்காலத்தில் பாலை நம் தருமத்தில் அழகு குறிப்புகளுடன் சேர்க்கக்கூடாது. அதற்கு காரணம், பாலில் இருக்கும் லாக்டிக் எனப்படும் ஒரு அமிலம் ஆகும். பாலில் உள்ள இந்த பிளாஸ்டிக் அமிலமானது குளிர் காலங்களில் சற்று அதிக கடுமையாக இருக்கும். அதனால் இது எரிச்சலை உண்டாக்கும். குளிர்காலத்தில் சருமத்திற்கு பாலை பயன்படுத்தும் பொழுது சருமத்தை சில சமயங்களில் எரிச்சல் அடைய செய்யும், மேலும் இதனால் சருமத்தில் ஆங்காங்கே சிவப்பு நிறமாக காணப்படும்.
மஞ்சள்
அழகு கலைகளுக்கு முக்கியமாக விளங்குவது மஞ்சள். அதிக மருத்துவ குணம் கொண்டது இந்த மஞ்சள்.அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை பெண்கள் இதனை அதிகமாக பயன்படுத்துவார்கள். மஞ்சள் ஒரு கிருமி நாசினி தானே இதை ஏன் குளிர்காலத்தில் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டால்,நீங்கள் சிறு வயது முதலே மஞ்சளை தினம்தோறும் பயன் படுத்துபவர்கள் என்றால் உங்களுக்கு இந்த குளிர் காலத்தில் மஞ்சள் பயன்படுத்துவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் உங்கள் சருமம் உணர்திறன் கொண்டதாக இருந்தால் நீங்கள் மஞ்சள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். காரணம் குளிர்காலத்தில் மஞ்சள் நம் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும், மேலும் இதனை நாம் குளிர்காலத்தில் பயன்படுத்துவதனால் வறட்சியும் உண்டாக்க வாய்ப்பு உள்ளது அதிலும் குறிப்பாக சருமத்தின் ஆங்காங்கே மஞ்சள் புள்ளிகளையும் இது ஏற்படுத்தும். இது எந்த நோயின் அறிகுறியும் அல்ல குளிர்காலத்தில் மஞ்சளின் ஒரு வகையான மாற்றமே இதற்கு காரணம். இந்த மஞ்சள் புள்ளி வந்தால் பிறகு இவற்றை அளிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும்.
தேன்

அழகு குறிப்புகளில் ராணி என்று அழைக்கப்படுவது இந்த தேன் தான். எந்த ஒரு அழகு குறிப்பு எடுத்தாலும் அதில் ஒரு முதன்மை பொருளாக இருப்பது தேன். அவ்வளவு நன்மைகளை பயக்கக்கூடிய தேன் நாம் வெளிப்புறத்திலும் அல்ல உட்புறத்திற்கும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் குளிர்காலத்தில் தேனை நம் சருமத்திற்கு பயன்படுத்துவது கூடாது. இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காரணம் தேன் குளிர்காலத்தில் நம் சருமத்தை ஈரப்பதில் இருந்து முற்றிலும் நீக்கி சருமத்தை வறண்ட நிலைக்கு தள்ளுகிறது. தேன் சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து விடுகிறது. தேனுக்கு பதிலாக சர்க்கரை பயன்படுத்தலாமா என்று கேட்டால் அதுவும் செய்யக்கூடாது. இரண்டுமே நம் சருமத்தின் ஒரு சிறந்த எக்ஸ்போலிட்டராக செயல்படுகிறது. அதனால் இந்த தேனும் சரி சர்க்கரையும் சரி இரண்டுமே நம் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசையை நீக்கி சருமத்தை வறண்டு எரிச்சலையும் உண்டாக்குகிறது. இதன் மூலம் குளிர் காலத்தில் நமது சருமம் பளபளப்பையும் பொலிவையும் இழக்கிறது.
மழைக்காலங்களில் அல்லது குளிர்காலங்களில் ஃபேஸ் க்ரீம் பயன்படுத்துவதை நிறுத்தாதீர்கள். குளிர்காலத்திலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதை தொடருங்கள். சிலர் வெயிலில் செல்லும் போது மட்டுமே சன் ஸ்கிரீன் பயன்படுத்துவார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது வீட்டில் இருந்தாலும் அல்லது தினமும் முக்கியமாக மழைக்காலத்திலும் அல்லது குளிர்காலத்திலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி சருமத்திற்கு எஸ்போலியேட்டரை பயன்படுத்த வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே ஃபேஸ் க்ரப் செய்யுங்கள். இறுதியாக முகத்தை ஈரப்பதமாக்க மறந்து விடாதீர்கள். ஏதேனும் ஒரு மாய்ஸ்டரைசரை பயன்படுத்துங்கள். சருமத்திற்கு எந்த ஒரு அழகு குறிப்புகளை பயன்படுத்தி பார்த்தாலும் கடைசியில் ஒரு மாய்ஸ்ரைசரை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.
இனிப்பை தவிருங்கள்
குளிர்காலங்களில் இனிப்பு சாப்பிடுவதற்கு ஆவலாகவும் ஆசையாகவும் இருக்கும். ஆனால் அது சருமத்திற்கு பல தீங்குகளை விளைவிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். சாக்லேட், கேரட் அல்வா, போன்ற பல இனிப்பு வகைகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை சருமத்தை வறட்சி அடைய வைத்து, இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை உங்கள் சருமத்தில் பிரதிபலிக்க வைக்கிறது.
இந்த இனிப்பு வகைகள் குளிர்காலத்தில் எடுத்துக் கொள்வதனால், இவை உங்கள் சருமத்தில் சுருக்கங்களையும் மற்றும் உங்கள் தோளில் கோடுகளையும் உருவாக்க செய்கிறது. இதன் மூலம் உங்கள் தோல் பார்ப்பதற்கு வயதானவர்களின் தோள் போல தோற்றமளிக்கும். அதனால் குளிர் காலத்தில் இனிப்பு வகைகளை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக பச்சை காய்கறிகள், பழ வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றை உட்க்கொல்லுங்கள். இவைகள் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், வெளிப்புறத் தோற்றத்தையும் உட்புற உடல் பாகங்களுக்கும் நன்மையை உண்டாக்கும்.
தோலை உரிப்பதை தவிர்க்கவும்
குளிர்காலத்தில் சருமத்தில் ஆங்காங்கே தோள்கள் வறட்சி அடைந்து கரடு முரடாக ஆங்காங்கே குவிந்து இருக்கும். உடனே நாம் அந்தத் தோலை உரிக்க முயற்சிப்போம். இது முற்றிலும் தவறு. இதுபோன்று வெளியே வரும் தோல்களை உரிக்கக்கூடாது. பலருக்கு முகத்திற்கு கிரீம் அல்லது ஏதேனும் பவுடர்கள் பயன்படுத்தும் பொழுதும் குளித்துவிட்டு வந்த பிறகும் கண்ணாடியில் பார்த்தால் முகத்தில் ஆங்காங்கே தோள்கள் குவிந்து நிற்கும். இதற்குக் காரணம் முகத்தை அதிக அளவு எக்ஸ்போலியட் மற்றும் அதிக அளவு ஸ்க்ரப்பிங் செய்தது. குளிர்காலத்தில் இதுபோன்று செய்வதை தவிர்க்கவும்.