Benefits of puthina in tamil
புதினாவை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மூலம் உடல் உபாதைகளை தவிர்க்கலாம்.இன்றய காலகட்டத்தில் மருத்துவ பயன்களை அதிகம் கொண்ட இந்த புதினாவை மருத்துவர் ரீதியாக பயன்படுத்துவதை விட, சமையல் ரீதியாக அதிகமாக நம் மக்கள் பயன்படுத்துகிறோம். புதினாவின் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது அவற்றைப் பற்றி விரிவாக காண்போம்.
புதினாவின் நன்மைகள் மற்றும் பயன்பாடு:
தொண்டைச் சார்ந்த பிரச்சினைகளான, உள்நாக்கு வளர்வது, தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு புதினா மிகப்பெரிய மருந்தாக பயன்படுகிறது. மூட்டு வலி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தினந்தோறும் புதினாவை எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்களது பிரச்சனையானது எளிதில் குணமடையும்.
கடுமையான சளி வரட்டு இருமல் உள்ளவர்கள் புதினா இலையை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து மிதமான சூடு வந்தவுடன் அதனை எடுத்துக் கொள்வதன் மூலம் இப் பிரச்சனையானது எளிதில் குணம் அடையும்.
பைல்ஸ் உள்ளவர்கள் புதினாவை தவிர்ப்பது மிகவும் நல்லது காரணம் இதில் உடல் சூட்டை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் புதினாவில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் அவர்களது தினசரி உணவில் புதினாவை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
வயிற்று கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு புதினா ஒரு நல்ல மருந்தாக பயன்படும். இது கழிவுகளை வெளியேற்றுவதற்கு மிகவும் பயன்படுகிறது.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு, நாம் புதினவை வெறும் தண்ணீரில் போட்டு வைத்து, அதனை அடிக்கடி பருகிக் கொண்டு வந்தாலே உடலின் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும், மற்றும் நச்சுக்கள் வெளியேறும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
சிறுநீரக பிரச்சனை குறைப்பதற்கு புதினா மிகப்பெரிய உதவியாக இருக்கும்.உடலில் சூடு அதிகமாக ஏற்பட்டால் சிறுநீரகம் அடிக்கடி வருதல்,மற்றும் சொட்டு சொட்டாக வருதல் போன்ற உபாதைகள் ஏற்படும்.அவ்வாறு வருவதை தவிர்ப்பதற்கு இந்த புதினா நீரை எடுத்துக் கொள்வதால் இந்த உபாதைகளை உடலில் இருந்து தவிர்க்கலாம்.
புதினாவை நம் உடலில் அதிகமாக சேரும்பொழுது மூச்சு திணறலானது நமக்கு வராது. புதினாவில் ஆக்சிஜனேற்றம் அதிகமாக உள்ளது பச்சைக் காய்கறிகளில் பொதுவாக ஆக்ஸிஜனேற்றம் அதிகமாக இருக்கும் அந்த வகையில் புதினாவில் அதிகமாக உள்ளது இதனை நாம் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் மூச்சுத்திணறலை நமக்கு வர விடாது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்ற அனைவரும் வெயிலில் கோடைகாலத்தில் அதிகமாக விளையாடுவது மற்றும் வேலை செய்வது, போன்ற பணிகளில் அதிகமாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு புதினா மற்றும் எலுமிச்சைச் சாறை அவர்களது அவர்களுக்கு கொடுக்கும் பொழுது உடலில் ஆற்றல் அது அதிகப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியும் தரும்.

தலைவலி ஏற்படும் பொழுது புதினாவை அவர்களது தேநீரில் கலந்து குடிக்கும் பொழுது தலைவலி ஆனது எளிதில் பறந்து ஓடும் மற்றும் வெந்நீரில் பெண்ணுடன் புதினா இலைகளை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் தலைவலி பறந்து ஓடும்.
புதினாவே பல வகைகளில் பலர் எடுத்துக் கொள்வார்கள் அவர்கள் சட்னியாகம் மற்றும் பழ சாறுகளுடனும் , துவையல்கள் போன்ற முறையில் அவர்களது உண்ணும் உணவில் புதினாவை எடுத்துக் கொள்கிறகள் .
தொண்டைச் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு புதினா ஒரு நல்ல தீர்வாக இருக்கும் மற்றும் இதில் இஞ்சி மற்றும் பூண்டு, சீரகம், மிளகு போன்றவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது தொண்டைச் சார்ந்த அனைத்து விதமான பிரச்சினைகளும் எளிதில் பறந்து ஓடும்.
தற்போதைய காலத்தில் புதினா பிரியாணியில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது.புதினா இல்லை என்றால் பிரியாணி இல்லை என்ற நிலை மாறிவிட்டது .புதினாவே பிரியாணிக்கு சமமாக புதினா புலாவ் போன்ற பல உணவுகளை செய்து நம் மக்கள் உண்கிறார்கள் இதில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆனது அதிகரிக்கும்.
ரத்தப்போக்கினால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் வயிறு பிடிப்பது போன்ற மாதவிடாய் பிரச்சனைகளுக்கு புதினா நல்ல தீர்வை கொடுக்கும்.
புதினாவில் வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள செல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது அவை நோய்களை எதிர்த்து போராடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முகப்பரு அதிகமாக உள்ளவர்கள் புதினாவை காயவைத்து அதனை பொடி செய்து அரைத்து முகத்தில் பூசுவதாலும் பச்சையாக,அதனை அரைத்து பூசுவதாலும் அவர்களது முகப்பருவானது எளிதில் மறையும் மற்றும் முகப்பருவினால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.
வாய் துர்நாற்றம் மற்றும் பற்களில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கு புதினாவானது மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது இந்த புதினாவை வெறும் வாயில் வெல்வதால் வாய் துர்நாற்றக் குறையும் மற்றும் தேவையற்ற கிருமிகளை நமது வாயிலிருந்து வெளியேற்ற மிகவும் உதவுகிறது.
புதினா செடியை வளர்ப்பது மிகவும் எளிதான ஒன்றாகும்.இந்த புதினா செடியை நமது ஜன்னல் ஓரத்திலும் மற்றும் பால்கனி போன்ற சிறு இடத்திலும் கூட வளர்க்கலாம்.

ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஹீமோகுளோபின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்த புதினா செடியை வளர்ப்பதன் மூலமாக நமக்கு மன நிம்மதியை கொடுக்கும். ஏனென்றால் இதில் உள்ள நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும்.இதன் நாம் உகரும் பொழுது இதில் உள்ள மனம் நமக்கு நல்ல ஒரு புத்துஉணர்ச்சியை உடலுக்கு ஏற்படுத்தும்.
ஒவ்வாமை பிரச்சினையை உள்ளவர்கள் புதினா தண்ணீரை எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவ்வாமை பிரச்சனையானது எளிதில் குணமடையும் உடல் எடை குறைப்பதற்கு புதினா டீயை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகமாக இருப்பதால் இப் பிரச்சனைகளை நம் உடலுக்கு வருவதை தடுக்கும்.