how to remove darkness around the neck using 8 home ingredients in tamil

how to remove darkness around the neck using 8 home ingredients: கழுத்தில் உள்ள கருமை உங்கள்  அழகை  கெடுக்கிறதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க! ஆச்சரியப்படுவீங்க!

பல பெண்களுக்கு இந்த பிரச்சனை உண்டு. கழுத்தில் மட்டும் கருமை அடர்த்தியாக தெரிவதனால் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் சற்று தயக்கம் காட்டுவார்கள். முகம் அழகாக இருந்தாலும் கழுத்தின் பின்புறமும் கழுத்தை சுற்றியும் கருப்பாக இருப்பது அவர்களை சங்கடமான ஒரு நிலைக்கு தள்ளும். 

பலமுறை பல வைத்தியங்களை பயன்படுத்தி இருந்தும் பலன் தரவில்லையா. கழுத்தின் கருப்பை நீக்குவதற்கு பல கிரீம்கள் பல ஆயின்மென்ட்கள்  கடைகளில் வாங்கி பயன்படுத்தியும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் உள்ளதா. இந்த இயற்கை டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. இத்தனை நாள் இது தெரியாம இருந்துட்டோமேன்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

கழுத்தில் கருமை நிறம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. நெற்றி முதல் கால் பாதம் வரை  இயற்கையாகவே கருமை நிறத்துடன் இருப்பவர்களுக்கு இந்த கழுத்தில் உள்ள கருமை தனியாக தெரியாது. ஆனால் உடலில் அனைத்து பாகங்களும் வெள்ளையாக இருந்தும் கழுத்துப் பகுதி மட்டும் கருமையாக இருப்பது என்பது பல கட்டங்களில் நம்மை மன அழுத்தத்திற்கே உள்ளாக்கும். அவற்றை எப்படி நீக்குவது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஏன் இவ்வாறு கருமை நிறம் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கழுத்தில் கருமை நிறம் காணப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்று நகை அணிவது. சிலருக்கு கவரிங் நகை அடைந்தால் விரைவில் கழுத்தை சுற்றி கருமை நிறம் உண்டாகும். சிலருக்கு தங்க நகையாக இருந்தாலுமே கழுத்தை சுற்றி கருமை நிறம் உண்டாகும். சிலருக்கு எந்த ஒரு ஆபரணம் கழுத்தில் அணிந்து இருந்தாலும் கழுத்தை சுற்றி கருமை நிறம் உண்டாகும்.

வெயிலில் அலைந்து திரிவது கழுத்தை சுற்றி கருமை நிறத்தை உண்டாக்கும். கழுத்தில் ஏற்படும் சதைகளின் மடிப்புகள் வியர்வைகளை அங்கங்கே தக்கவைத்துக் கொள்கின்றன. இவை கருமை நிறத்தை உண்டாக்குகிறது.

கழுத்தை சுற்றி கருமை நிறம் உண்டாகுவதற்கு உடல் பருமனும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்களும்,கழுத்து கருமையாக காணப்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட்களை கொண்டது  ஓட்ஸ். இது கழுத்தில் மேலே படிந்துள்ள கருமை நிறத்தை நீக்கி, வெண்மை நிறத்தை வெளிக்கொண்டு வருகிறது.அதிக அளவு  கழுத்து கருமை நிறமாக காணப்படுபவர்கள்,  உங்கள் கழுத்திற்கு ஏற்ப தேவையான ஓட்சை அரைத்து பவுடராக்கி அதனுடன் சிறிதளவு தக்காளி விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டாலும் நல்லது தான். அரைத்து எடுத்துக் கொண்ட இந்த  விழுதை கழுத்தை சுற்றி உள்ள கருமை நிறங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு இருவது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவும். இவ்வாறு செய்து வந்தால் எளிதில் கருமை நிறம் நீங்கி கழுத்தின் தோலை ஒளிர செய்யும். இதற்கு ஓட்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.

அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட்களை உள்ளடக்கியுள்ளது எலும்பிச்சை சாறு. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆனது சருமத்தை பொலிவாக ஒளிர வைக்க உதவி செய்கிறது. இந்த எலுமிச்சை சாறு உள்ளடக்கியுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்  டைரோசின்களுக்கு  எதிராக போராடுவதாக சமீபத்திய ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் தேவைக்கேற்ப ரோஸ் வாட்டர் எடுத்துக்கொண்டு அதற்கு சமமான அளவு எலுமிச்சை சாறு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து கழுத்தை சுற்றி அப்ளை செய்து 20 அல்லது 25 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு குளிர்ந்த நீரினால் கழுவவும். இதுபோல தினமும் செய்து வந்தால் கழுத்தை சுற்றியுள்ள கருமை நிறம் விரைவில் மாறும்.

ஆரஞ்சு  தோலில் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆனது டைரோசினுக்கு எதிராக செயல்படுகிறது. ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் காயவைத்து பவுடராக அரைத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். அல்லது ஆரஞ்சு தோல் பவுடர் என்று கடைகளில் கிடைப்பதையும் பயன்படுத்தலாம். இந்த ஆரஞ்சு பழ தோல் பவுடருடன் சிறிதளவு பசும்பால் சேர்த்து அல்லது ஆரஞ்சு சாற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் ரெடி செய்து கழுத்தை சுற்றி அப்ளை செய்யவும். இந்த பேக்கை 20 அல்லது 25 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கழுத்தை சுற்றியுள்ள கருமை எளிதில் நீங்கி பளபளப்பாக காட்சியளிக்கிறது.

காபி தூளில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் டைரோசனை எதிர்த்து போராடுகிறது. இது கழுத்தில் ஏற்படும் கருமையை தடுத்து நிறுத்தி, மேலும் கருமை நிறம்  ஆகாமல் பாதுகாக்கிறது. காபித்தூளுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து ஒரு பேஸ்ட் ஆக ரெடி செய்து.  இதை கழுத்தை சுற்றி உள்ள அல்லது கழுத்தில் உள்ள கருமை இருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை மட்டும் செய்தாலே போதும். விரைவில் நல்ல ஒரு பலன் தரும். இந்த பேக் செய்து முடித்தவுடன் மாய்ஸ்ரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய மறந்து விடாதீர்கள்.

கோதுமை மாவுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு ரெடி செய்து கொள்ளவும். ரெடி செய்த இந்த பேஸ்ட்டை கழுத்தை சுற்றி பேக்காக அப்ளை செய்து 20 அல்லது 25 நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும். பிறகு  மெதுவாக தேய்த்து கழுவவும். கழுத்தில் வறட்சி அல்லது கழுத்துப் பகுதியில் சிறு சிறு பருக்கள் உள்ளவர்களாக இருந்தால் இந்த செய்முறையை செய்ய வேண்டாம். ஏனென்றால்  எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு நல்ல பலனை எளிதில் கொடுக்கும்.இந்த பேக் செய்து முடித்தவுடன் மாய்ஸ்ரைசர் அல்லது ஏதேனும் ஈரப்பதம் ஓட்டும் பொருளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லுடன் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இந்த ஜல்லை கழுத்தை சுற்றியுள்ள கருமை நிறத்தில் அப்ளை செய்யவும். 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாக செய்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான நேரில் கழுத்தை கழுவவும்.  இவ்வாறு தினமும் செய்து வந்தால் கற்றாழையில் உள்ள வைட்டமின் சி ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்வதுடன் கருமையை நீக்க உதவுகிறது.

इस पोस्ट को दोस्तों के साथ शेयर करे:
Gowtham

Leave a Comment