how to remove underarm darkness in tamil : அக்குளில் உள்ள அடர்த்தியான கருமையை நீக்க எளிய டிப்ஸ். அட!இத்தன நாளா இது தெரியாம போச்சே!
உடல் முழுவதும் வெள்ளையாக இருந்தும், அக்குள் மட்டும் கருமையாக இருக்கிறதா? பல ட்ரீட்மென்ட் எடுத்தும் பயன் தரவில்லையா? விலை உயர்ந்த கிரீம்களை பயன்படுத்தியும் எந்த ஒரு மாற்றமும் இல்லையா? வெயில் காலம் வந்தாலே இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக மாறும். வியர்வை ஆடையுடன் கூடிய அக்குள் வெயில் காலத்தில் இந்த வியர்வையால் கருமை நிறம் மேலும் அடர்த்தியாக மாற வாய்ப்பு உள்ளது. அக்குள் கருமையை போக்க ஏதேனும் ஒரு ஹைட்ரேடிங் மற்றும் எக்ஸ்போலியட் மற்றும் ஏதேனும் இயற்கையான பிளீச்சிங் முறைகளை பயன்படுத்தலாம்.
அக்குள் கருமையாக மாற காரணங்கள்:
- அக்குள் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்குவதற்கு நாம் பயன்படுத்தும் கிரீம்கள் ஒரு முக்கிய காரணம். முடிகளை நீக்குவதற்காக நாம் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் அவை கருமை நிறமாக மாறுகிறது. தொடர்ந்து நாம் அதை பயன்படுத்துவதால் அடர்த்தியான கருமை நிறமாக மாறுகிறது.
- அக்குள் முடியை நீக்குவதற்கு ரேசர் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் அக்குளில் கருமை நிறம் மேலும் அதிகரிக்கிறது.
- உடலில் சில பகுதிகள் அதாவது கை பின்புற முட்டி, கால் முட்டி தொடை இடுக்கு, கழுத்தின் பின்புறங்கள் மற்றும் அக்குள் போன்றவை மட்டும் கருமையான நிறத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணம் உடலில் மெலனின் அதிகரிக்க தொடங்குவது.

அக்குள் கருமையை போக்கும் எளிய டிப்ஸ்:
உருளைக்கிழங்கு
அக்குளில் உள்ள முடியை நீக்குவதற்கு ரேசரை பயன்படுத்துகிறோம். அக்குளில் உள்ள கருமை நிறமானது மேலும் அடர்த்தியாக மாறுமே தவிர, அவ்வப்போது நீங்கள் எந்த ஒரு ப்ரீமையும் அல்லது வேறு ஏதேனும் கெமிக்கல் நிறைந்த ஆயின்மெண்ட் பயன்படுத்துவதன் மூலம் கருமை குறையவோ நீங்கவோ செய்யாது. குழுவில் உள்ள கருமையை போக்க வீட்டில் அன்றாடம் இருக்கும் ஒரு காய்தான் உருளைக்கிழங்கு.

உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதை அக்குளில் வட்ட வடிவில் நன்றாக மசாஜ் செய்யவும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி தோள்களில் உள்ள செல்களுக்கு நல்ல ஒரு ஆன்டிஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்து நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து இந்த பேஸ்ட் அக்குளில் தடவி 25 நிமிடம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் அக்குளை கழுவவும். அல்லது குளிர்ந்த நீரில் ஒரு காட்டன் துணியை நினைத்து அக்குளில் மெதுவாக தேய்க்கவும்.இதன் மூலம் கருமை நிறத் தோல் மறைந்து மெது மெதுவாக கருமை நிறம் மாறுவதை காணலாம்.
கற்றாழை
கற்றாழையை வெட்டி அதன் ஜூலை எடுத்து குளில் நன்றாக தடவி வர வேண்டும். அக்குளில் உள்ள முடியை நீக்கிய பிறகு கற்றாழை ஜெல்லை தனியே எடுத்து அக்குளில் நன்றாக தேய்க்க வேண்டும். இரண்டும் மூன்று முறை மட்டுமே செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே மாற்றத்தை காணலாம்.

மேலும் குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு அக்குளில் கற்றாழையின் ஜெல்லை தேய்த்து நன்றாக அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு குளிக்கவும். இப்படி செய்வதனால் அக்குளில் உள்ள வியர்வை வாடையும் மற்ற வாடைகளும் நீங்கும்.
தேன் மற்றும் மஞ்சள்
தேன் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் மஞ்சள் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் என மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து ஒரு பேஸ்ட் போல் ரெடி செய்துவிட்டு. அக்குளில் நன்றாக தடவவும்.சிறிது நேரம் களித்து வெதுவெதுப்பான நீரில் அகற்றவும்.
ஆலிவ் ஆயில்
ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் பிரவுன் சுகர் எனப்படும் சர்க்கரையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்த அதை அக்குளில் நன்றாக தேய்த்து எஸ்போலியட் செய்யவும்.சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு இயற்கை முறையில் செய்யும் பொழுது விரைவில் பலன் தரும்.
கருமையை நீக்கும் கடலை மாவு
கருமை நிற தோலை வெண்மையாக்கும் தன்மையுடையது கடலை மாவு. அக்குளில் உள்ள முடியை நீக்குவதற்கு ரேசர் மற்றும் கிரீம்களை பயன்படுத்துவதனால் கருமை நிறம் மேலும் அடர்த்தியா காணப்படும். இதனால் ஸ்லீவஸ் ஆடைகளை போடுவதற்கு பெண்கள் தயங்குவார்கள். கடலை மாவு கருமையை நீக்கும் தன்மையுடையதால் முகத்திற்கும் அதிக அளவு அழகு கலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கடலை மாவுடன் சிறிதளவு எலும்பிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக ஒரு பேஸ்ட் போல் ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை அக்குளில் தேய்த்து ஒரு பேக்காக போடவும். இந்த பேக்கை 5 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு பிறகு 20 அல்லது 25 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். தினமும் அல்லது இரண்டு நாட்கள் ஒரு முறை இதுபோல செய்து வந்தால் வெகு விரைவில் கருமை நிறம் நீங்கி மென்மையாக மாறும்.
கருமையை நீக்கும் ஆரஞ்சு பழத்தோல்
ஆரஞ்சு சாப்பிட்டவுடன் அதன் தோலை தூக்கி எறியாமல் சேர்த்து வைத்து வெயிலில் நன்றாக உலர்த்தி பின்பு மிக்ஸியில் போட்டு ஒரு பொடியாக ரெடி செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் எப்பொழுது தேவைப்படுகிறது அப்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் ஆரஞ்ச் கலர் தோல் பவுடரை சேர்த்து பேஸ்ட் ஆக எடுக்கவும். இந்த மூன்று பொருளையும் சேர்த்து தயார் செய்து வைத்த பேஸ்ட்டை அக்குளில் தடவி 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் வைத்துக் கொள்ளவும். பின்பு குளிர்ந்த நீரினால் மிருதுவாக தேய்த்து கழுவுவோம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதுபோன்று செய்து வருவதனால் விரைவில் அக்குளில் உள்ள கருமை நீங்குவதை கண்கூடாக காணலாம்.
டீ ட்ரீ ஆயில்
தேயிலை மர எண்ணெய் சருமத்தில் உள்ள பல நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது. தொழில் ஏற்படும் பல பிரச்சனைகளை குறைத்து முழுமையாக சரி செய்ய இந்த தேயிலைமர எண்ணெய் பயன்படுகிறது. அக்குளில் உள்ள அடர் கருமையான நிறத்தை போக்குவதற்கு இந்த தேளைமறை எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு அல்லது மூன்று துளிகள் மட்டுமே இன்று தேயிலைமர எண்ணெய் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து விட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் குளித்துவிட்டு வந்த பிறகு அக்கலை நன்றாக உணர வைத்துவிட்டு செய்து வைத்துள்ள ஸ்ப்ரேயை இரண்டு பக்கமும் அடித்துக் கொள்ளவும். இது போன்ற செய்வதனால் வேகமாக அக்குளின் கருமை வேகமாக மறையும்.