home remedies to remove scars naturally: தழும்புகளை எளிய முறையில் முழுமையாக நீக்கிவிடலாம்! இதோ இயற்கை முறை டிப்ஸ்!
உங்கள் உடலில் தீக்காயங்கள், வெட்டுக்கள், கீறல்கள், அல்லது முகப்பரு போன்றவை ஏற்பட்டு அவை தற்போது சரியாகி இருக்கலாம். ஆனால் அவை ஏற்படுத்திய தழும்புகள் நீங்காமல் அப்படியே இருக்கும். அவற்றை மறைக்க நினைப்பதை விட முழுமையாக நீக்குவதற்கான வழிமுறைகளை காணலாம். தழும்புகளை நீக்குவதற்கான ஆயின்மெண்ட் மற்றும் கிரீம்கள் நிறைய கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தினால் தழும்புகள் நீங்குமா என்று பயன்படுத்தியவர்களிடம் கேட்டால் அவர்கள் இல்லை என்று தான் கூறுவார்கள். அது வேறு ஏதேனும் சரும பிரச்சனையை உண்டாக்க கூடும். உங்கள் வீட்டில் உள்ள சில எளிய பொருட்களை இயற்கை பொருட்களை பயன்படுத்தி தழும்புகளை முழுமையாக நீக்கிவிடலாம். இதற்கு சற்று காலம் எடுக்குமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் இதன் பலன் தரும்.
கற்றாழை
பல வீடுகளில் கற்றாழைச் செடிகளை வளர்த்து வருகின்றன. மேலும் அனைத்து வகையான கடைகளிலும் கற்றாழை ஜெல் விற்கப்படுகிறது. கடைகளில் வாங்கி கற்றாழை ஜூலை பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள கற்றாழையை அறுத்து பயன்படுத்தினால் நல்ல பலன் தரும். கற்றாழையை அறுத்து அதனை சிறிது நேரம் அப்படியே வைத்தால் அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் ஒன்று வெளிவரும். அது முழுமையாக வெளிவந்த பின் நீரில் கழிவி விட்டு பிறகு இரண்டு பக்கங்களிலும் இருக்கும் நூல் போன்ற தோல்களை நீக்கிவிட்டு பிறகு இடைகளில் இருக்கும் தோலை நீக்கி உள்ளே உள்ள ஜெல்லை தனியாக எடுத்து பயன்படுத்தவும். கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதால் அது பல நன்மைகளைத் தரும். முகப்பருவினால் ஏற்படும் புள்ளிகளை நீக்கி சரி செய்ய உதவும். இறந்த செல்களை நீக்கி புதிய செல் வளர உதவுகிறது. கற்றாழை ஜெல்லில் என்சைங்கள் உள்ளன. இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் உடைந்த தோள்களை சரி செய்வதற்கு மேலே புதிய தோல்களை வளர இது உதவுகிறது.
கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு தழும்பு இருக்கும் இடத்தின் மேல் அப்ளை செய்து லேசாக தடவி விடவும். தழும்புகளுக்கு மேல் இந்த கற்றாழை ஜெல் அதிகபட்சமாக அரை மணி நேரம் அப்படியே இருக்கவும். அரை மணி நேரத்திற்கு பிறகு கற்றாழை ஜெல் தழும்புகளின் உறிஞ்சப்படும். இவ்வாறு தினமும் இரண்டு முறையாவது செய்ய வேண்டும். காலை மற்றும் இரவு செய்தால் நல்லது. இல்லை எனில் ஒரு நாளைக்கு நீங்கள் எப்பொழுது அரை மணி நேரத்தை இதற்காக செலவிட விரும்புகிறீர்களோ அப்பொழுது செய்து பாருங்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்குள்ளாகவே உங்களுக்கு பாதி குணமாகி மீதியும் குணமாக தொடங்கி விடும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு காயங்களை மற்றும் காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்குவதற்கு சிறந்து விளங்குகிறது.எலுமிச்சை சாறு இயற்கையாகவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் இயற்கை அமிலங்கள் நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே வடுக்களை நீக்க மற்றும் மறைக்க உதவுகிறது. எலுமிச்சை பழம் ஒரு சிறந்த எக்ஸ்பாலியேட்டராக விளங்குகிறது. இதை சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தக்கூடாது. எனினும் தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் பொருட்களோடு இதனை பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதன் மூலம் இது சருமத்திற்கு ஒரு பொலிவையும் தருகிறது.
உங்கள் உடம்பில் உள்ள தழும்புகளை சுற்றி உள்ள சில தோள்களை சுத்தம் செய்துவிட்டு, காது குடையும் பட்ஸ் அல்லது ஏதேனும் காட்டன் பஞ்சுகளை பயன்படுத்தி இந்த எலுமிச்சை சாறு சிறிது நேரில் சேர்த்து கலக்கி பஞ்சினை தொட்டு தழும்புகள் உள்ள இடத்தில் மெதுவாக வைக்கவும். 10 முதல் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு ஒருமுறை கண்டிப்பாக செய்ய வேண்டும் அல்லது இரு முறை செய்தால் விரைவில் இதன் பயனை காணலாம்.
தேன்
தேன் ஒரு சிறந்த அலர்ஜி எதிர்ப்பு பண்பு மற்றும் பாக்டீரியாக்களை கொள்ளும் திறமை கொண்டது. இயற்கையாகவே வடுக்களை அகற்றுவதற்கான மருந்து இந்த தேனில் உள்ளது. தேன் வடுக்களை மற்றும் அகற்றுவது இல்லாமல் அதற்கு முன்னால் ஏற்படும் புண்களையும் ஆற்ற உதவுகிறது. வறண்டு காணப்படும் தழும்புகளுக்கு சரியான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை ஊட்டமளித்து குணப்படுத்துகிறது. பல காயங்களுக்கு சிறந்த சிகிச்சையாக தேன் விளங்குகிறது.
ஒரு பாத்திரத்தில் உங்கள் தேவைக்கேற்ப உங்கள் தழும்புகளின் அடர்த்தியை பொறுத்து தேனை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது இரண்டு டீஸ்பூன் தேன் எடுத்துக் கொண்டால் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து தழும்புகளின் மேல் அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்துவிட்டு அப்படியே வைக்கவும். மசாஜ் முடிந்த பிறகு வெந்நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து பிழிந்து அந்த துணியை தேன் வைத்த தழும்பின் மேல் வைக்கவும். இதுபோல வெந்நீர் நீங்கள் நினைத்த துணியை அதன் மேல் வைப்பதன் மூலம், அதன் வேலையை அது வேகப்படுத்துகிறது. இவ்வாறு தினமும் செய்து வாருங்கள். அந்த தழும்பு உங்களுக்கு நிரந்தரமாக மறையும் வரை இதனை செய்து வரவும்.
லாவண்டர் எண்ணெய்
லாவண்டர் எண்ணெயில் அதிகம் மந்திர சக்திகள் உள்ளன. அதாவது தாங்க முடியாத தலைவலி மற்றும் நீண்ட நாட்கள் நீங்காத தழும்புகளை சில நாட்களிலேயே சரி செய்யும் ஒரு சக்தி இந்த லாவண்டர் எண்ணிக்கை உள்ளது. லாவண்டர் எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புகள் உள்ளன. இவை புதிய மற்றும் நீண்ட நாட்கள் நீங்காத தழும்புகளை எளிதில் சரி செய்யும் தன்மை கொண்டது. இந்த லாவண்டர் எண்ணெய் இயற்கை கொடுத்த ஒரு அதிசய மூலப் பொருள் என்று அழைக்கப்படுவார்கள்.
லாவாண்டர் எண்ணெய் மற்றும் அதே சம அளவு ஆலிவ் எண்ணெயும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை தழும்புகளின் மேல் அப்ளை செய்து ஐந்து முதல் பத்து நிமிடம் அப்படியே மசாஜ் செய்யவும். பிறகு 20 முதல் 25 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு, நீரில் கழிவினாலும் சரி அல்லது அப்படியே இருந்தாலும் நல்லது தான். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது மூன்று முறையாவது செய்து வர வேண்டும். இப்படி செய்தால் தான் உங்களின் தழும்புகள் மற்றும் வடுக்கள் முழுமையாக மறையும்.