5 best home remedies to controlling excess oil on face in tamil

home remedies to controlling excess oil on face: எண்ணெய் வழியும் முகத்திற்கு.வீட்டில் உள்ள இந்த சில பொருட்களை போதும்! இனி உங்கள் முகத்தில் எண்ணெய் வழியாது!

முகத்தில் இயற்கையாகவே எண்ணெய்  தன்மையே இருக்கும். அவ்வாறு இருந்தால்தான் முகம் வறட்சி அடையாமல் பருக்கள் இல்லாமல் மேலும் தோல் உரியாமல் எந்த ஒரு சரும பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். ஆனால் அதே முகத்தில் எண்ணையானது அளவுக்கு அதிகமாக இருப்பது பல பிரச்சனைகளை கொடுக்கும். அளவுக்கு அதிகமாக எண்ணெய் வழிவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதனால் பருக்கள் தோன்றும் வலி மிகுந்த பொருட்கள் தோன்றும் எந்த ஒரு மேக்கப் போட்டுக் கொண்டாலும் அவற்றிற்கு மேல் இந்த எண்ணெய் பசை வந்து நிற்கும். சிலருக்கு அளவுக்கு அதிகமாக முகத்தில் எண்ணெய் சுரக்கும். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கலாம் என்பதை கீழே உள்ள கட்டுரையை முழுமையாக படித்து பயன்படுங்கள்.

தேன்  கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழம் ஸ்க்ரப்

சிறிதளவு தேன் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும். கல் உப்பு கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும். கல் உப்பு அரைத்து  தூள் உப்பாக கடைகளில் விற்கப்படும் உப்பினை பயன்படுத்த வேண்டாம். இவை மூன்றையும் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கப்படுகின்றது. கல் உப்பில் இயற்கையாகவே எக்ஸ்ட்போலியன்ட் உள்ளது.மேலும் அதில் மினரல்கள் உள்ளன. இவை முகத்தில் ஏற்படும் பருக்களை அளிக்க உதவுகிறது.

எலுமிச்சை பழத்தில் இயற்கையாகவே ஒரு நல்ல கிளிசிங் கிளீன்சிங் ஏஜென்ட் ஆக செயல்படும். தேன் உங்களுக்கு நல்ல இயற்கையான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை தூய்மைப்படுத்துகிறது. 

இவை மூன்றையும் நன்றாக கலந்து கல் உப்பு நன்றாக கரைந்த பின், முகத்தில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடம் மெதுவாக ஸ்கிரப் செய்யவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில்  முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால்  மெல்ல மெல்ல எண்ணெய்  வழிவது குறையும்.

காபித்தூள் மற்றும் தயிர் ஸ்கிரப்

காபித்தூள் மற்றும் தயிர் ஆகிய இரண்டும் சருமத்திற்கு மிகச்சிறந்த ஒரு பொருளாகும். காபித்தூள் இறந்த சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்கள் உருவாக வழி வகுக்கிறது. மேலும் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகப்படுத்துகிறது. மற்றொருபுறம் தயிர் பயன்படுத்துவதன் மூலம் சருமம் கொழுப்பு மற்றும்  புரதத்தின் மூலம் உங்கள் முகம் பார்ப்பதற்கு ஒரு வெல்வெட் துணி போல காட்சியளிக்கிறது. தயிர் பயன்படுத்துவதன் மூலம் சருமம்  பாக்டீரியா இல்லாமல் நாள் முழுவதும் ஈரப்பதத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் காபித்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை முகத்தில்  தடவி, பிறகு 5 முதல் 10 நிமிடங்கள்  நன்றாக வட்ட வடிவில்  ஸ்க்ரப் செய்யவும். 10 நிமிடங்கள்  ஸ்க்ரப்  செய்த பின் 15 நிமிடம் வரை  முகத்தில் அப்படியே வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் நீங்கி முகம் வெல்வெட் துணி போல் காட்சியளிக்கும். 

கடலை மாவு தயிர் மற்றும் உப்பு  ஸ்கிரப்

கல் உப்பை கரைத்து பயன்படுத்துவதன் மூலம் அது முகத்தில் உள்ள கெட்ட அழுக்குகளை நீக்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தயிர் முகத்தை சுத்தம் செய்து சரியான ஈரப்பதத்துடன் தக்க வைக்க உதவுகிறது. கடலை மாவு முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையினை நீக்க உதவுகிறது. 

ஒரு ஸ்பூன் கடலை மாவு ஒரு ஸ்பூன் கல் உப்பு அரை டீஸ்பூன் தயிர் மூன்றையும் நன்றாக பேஸ்ட் பதம்  வரும் வரை நன்றாக கலக்கவும். கல் உப்பு தயிரில் நன்றாக கரையும் வரை கலக்கிவிட்டு. பிறகு அதனை முகத்தில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடம் நன்றாக ஸ்கிரப் செய்யவும். பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் ஒரு முறை இதுபோல செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் நீங்கி சருமம் சாப்ட்ஆக இருக்கும்.

தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் 

தக்காளியில் இயற்கையாகவே அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.  சருமத்தில் எண்ணெய்  உற்பத்தியை தடுப்பதோடு, சருமத்திற்கு வயதாகாமல் எப்பொழுதும் இளமையாக தோற்றமளிக்க இது உதவுகிறது. சர்க்கரை ஒரு சிறந்த எக்ஸ்போலியேட்டராக செயல்படும் .சர்க்கரை சருமத்தில் உள்ள வெள்ளை மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி இறந்த செல்களை நீக்கி மந்தமான செல்களை வேகப்படுத்த ஊக்குவிக்கிறது.

ஒரு தக்காளியை இரண்டாக நறுக்கி அதனுடன் சர்க்கரையை தொட்டு. ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை நன்றாக ஸ்கிரப் செய்யவும். வாரம் இரண்டு முறை இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் முகம் சாப்ட் ஆக மற்றும் பளபளப்பாகவும் தோற்றமளிக்கும்.

பப்பாளி ஸ்க்ரப்

பப்பாளி இயற்கையாகவே சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணக்கூடிய ஒரு இயற்கை மருத்துவம். எண்ணெய் பசை அதிக அளவில் உள்ள சருமத்திற்கு இது ஒரு சிறந்த மருந்து. அடைக்கப்பட்ட சருமத்தினை சரி செய்து முகத்தை பளபளக்க வைத்து வேறு எந்த ஒரு சரும பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது இந்த பப்பாளி.

ஒரு பப்பாளியை நன்றாக மசித்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக ஸ்கிரப் செய்துவிட்டு ஒரு ஐந்து முதல் ஏழு நிமிடம் மட்டும் ஸ்கிரிப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும். இதுபோல வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் எண்ணெய் பிசுகின்றியும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் பருக்கள், முகத்தில் உள்ள துறைகள் அடைப்பு, மற்ற சரும பிரச்சனை எதுவும் இன்றி பாதுகாக்கலாம்.

इस पोस्ट को दोस्तों के साथ शेयर करे:
Gowtham

Leave a Comment