உதடு கருமையாக இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா?கருமை நிற உதட்டை இளஞ்சிவப்பாக எளிதில் மாற்ற ஈசி டிப்ஸ்
புன்னகிக்கும் போது முகம் அழகாக இருக்கும். அதே போல் நாம் புன்னகிக்கும் உதடானது பார்ப்பதற்கு அழகாக இருந்தால் மேலும் முகம் அழகாக காட்சியளிக்கும். சிலருக்கு உதடு கருமை நிறமாக இருக்கும். ரசாயனங்கள் நிறைந்த உதட்டுச் சாயங்களை அதிகப்படியாக பயன்படுத்துவதனால் சிலருக்கு உதடு கருமையான தோற்றத்திற்கு மாறும். கருமை நிறத்தில் உள்ள உதட்டினை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவது கடினமல்ல. சில இயற்கை பொருட்களைக் கொண்டு கருமை நிற உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றலாம்.
உதடு கருமை நிறமாக இருப்பதற்கு காரணம்
புகைப்பிடித்தால் வெட்டுதல் உதடு கருவியாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. இது காரணங்களில் ஒன்றாகும். உதடு கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அதிகப்படியான காபைன் உட்கொள்ளுதல், புகைப்பிடித்தல், உடல்நல பிரச்சனை, அதிகப்படியான ரசாயனம் நிறைந்த உதட்டுச் சாயங்கள் என பல உள்ளன. மேலும் சில மோசமான உணவு பழக்க வழக்கங்கள் உதட்டின் வழியாக பிரதிபலிக்கம்.கருமை உடல் என்பது பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் ஒரு பிரச்சினையாகும். இந்த கருமை நிறத்தை போக்குவதற்காகவே ரசாயனம் நிறைந்த லிப்ஸ்டிக்குகளை பெண்கள் பயன்படுத்துகின்றனர். இவற்றை இயற்கை முறையில் நிரந்தரமாக விரட்ட பல வழிகள் உள்ளன. எவற்றை எவ்வாறு பயன்படுத்தினால் இந்த உதட்டு கருமையானது நிரந்தரமாக மறையும் என்பதை காணலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே கருமை நிறத்தை நீக்கி ஈரப்பதத்தோடு தக்க வைக்க உதவும். அதற்காகத்தான் நம் முன்னோர்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே தேங்காய் எண்ணெயை உடலுக்கு தேய்ப்பார்கள். இந்த தேங்காய் எண்ணெயை உதட்டில் தேய்த்து வருவதன் மூலம் உதட்டில் இருக்கும் தேவையற்ற கருமை நிறம் நீங்கி உதடு எப்பொழுதும் வீரத்தன்மையோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெயை இப்படி நேரடியாக உதடுகளில் பயன்படுத்தலாம். மேலும், தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு நான்கு அல்லது ஐந்து சொட்டுக்கள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து உதடுகளில் அப்ளை செய்து வரலாம். தினமும் இதுபோல செய்து வந்தால் விரைவில் உதட்டில் உள்ள கருமையும் கரும்புள்ளிகளும் நிரந்தரமாக நீங்கும்.
தேனும் எலுமிச்சை சாறும்
அழகு குறிப்பு என்று பார்த்தாலே தேன் இல்லாமல் இருக்காது. அதுபோல எலுமிச்சை சாறும் இல்லாமல் இருக்காது. எலுமிச்சை சாறு சருமத்தை புலியுடன் பாதுகாக்கும். தேன் அலர்ஜி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. தேனுடன் எலுமிச்சை சாறு சில சொட்டுக்கள் சேர்த்து கலந்து உதட்டில் தடவி வருவதனால் உதடு கருமை நீங்கி இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும்.

இரண்டு முறை மூன்று முறை செய்தாலே இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் என்று நினைக்கக் கூடாது. தினமும் தொடர்ந்து செய்து வந்தால் மெல்ல மெல்ல கருமை நீங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதை காணலாம்.
மஞ்சளும் பாலும்
மஞ்சள், உதட்டில் இருக்கும் மற்றும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சுத்தம் செய்யும் வல்லமை உடையது. காய்ச்சாத பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குலைத்து அந்த பேஸ்ட்டை உதடுகளில் அப்ளை செய்து வரவும். அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து உதட்டை குளிர்ந்த நீரினால் கழுவவோ அல்லது ஒரு துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அந்த துணியால் உதட்டை துடைத்து எடுக்கவோ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உதடு கருமை நிறம் நீங்கி காணப்படும்.
கற்றாழை ஜெல்
அழகு குறிப்பு என்று எடுத்தாலே தேன் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு கற்றாழை ஜெல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது. கற்றாழை ஜெல்லில் ஆலோயின் என்ற ஒரு பொருள் காணப்படுகிறது.

இது கருமையை நீக்கும் தன்மையுடையது. அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வரலாம். இதன் மூலம் உதட்டின் கருமையை எளிதில் நீக்கலாம்.
ரோஜா இதழ்கள்
பொதுவாகவே அழகு சாதன பொருட்களில் அதிகமாக சேர்க்கப்படுவது ரோஜா இதழ்கள். ரோஜா இதழ் உதட்டின் கருமையைப் போக்கி இளஞ்சிவப்பு நிறமாக காணப்பட உதவுகிறது. ரோஜா இதழ் உடன் சிறிதளவு தேன் சேர்த்து உதட்டில் அப்ளை செய்து வரவும். இதன் மூலம் வேகமாக இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டு வரலாம்.
மாதுளை பழம்
மாதுளை பழத்தில் அதிக அளவு விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. மாதுளை பழம் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனையை தீர்ப்பதோடு உதடுகளை மென்மையாக வைக்க உதவுகிறது. இரவு தூங்குவதற்கு முன்பு மாதுளை முத்துக்களில் இருந்து வரும் சாரை உதடுகளில் தடவி வரவும். இது உதட்டை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைத்து உதட்டில் உள்ள கருமையை நீக்க வழி வகுக்கிறது.
தயிர்
கருமை நிறத்தை போக்குவதற்கு முக்கிய பங்காற்றும் ஒரு பொருள் தயிர். தயிரை உதடுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். தயிரை மட்டுமே நேரடியாக உதட்டில் தடவி ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு பிறகு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் உதட்டை கழுவி வரவும்.

தயிருடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்தும் உதட்டில் தடவி வரலாம். இதுபோன்ற தினமும் செய்வதனால் நாளடைவில் கருமை நிறம் நீங்கி உதடு மென்மையாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் காணப்படும்.
உருளைக்கிழங்கு
கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்குவதற்கு உருளைக்கிழங்கு பெரும் பங்காற்றுகிறது. அதுபோலவே உதட்டில் இருக்கும் கருமையை போக்குவதற்கும் உருளைக்கிழங்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. உருளைக்கிழங்கில் வைட்டமின் சி உள்ளது. அதனால் இது ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. உருளைக்கிழங்கு இயற்கையான பிளீச்சிங் ஏஜெண்டாக செயல்படும்.

உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, உதட்டின் மேல் மிருதுவாக தடவி வரவும். இவ்வாறு சில நிமிடங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதுபோல தொடர்ந்து செய்வதனால் உதட்டின் மேல் உள்ள கருமை நிறம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். உதடு கருமையாக இருக்கின்றவர்கள் மட்டுமின்றி அனைவரும் இதைத் தொடர்ந்து செய்வதனால் உதடு மென்மையாகவும் இளஞ்சிவப்பாகவும் இருக்கும். பார்ப்பதற்கு அழகான தோற்றத்துடன் காணப்படும்.
பீட்ரூட்
இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதற்கான ஒரு இயற்கை தீர்வு என்று கூறினாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது பீட்ரூட். உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டை தினமும் உதடுகளில் தடவி வருவதனால் உதடு மென்மையாகவும் பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறமாகவும் விரைவில் காணப்படும். தொடர்ந்து இதுபோல செய்வதனால் உங்கள் உதடு இழந்த நிறத்தை மீண்டும் பெறலாம். இது ஒரு இயற்கையான உதட்டு சாயமும் கூட.
சர்க்கரை ஸ்க்ரப் செய்யலாம்
கருமை நிறத்தை நீக்குவதற்கு உதட்டுக்கு சர்க்கரை ஸ்க்ரப் செய்யலாம். சர்க்கரையை சிறு தூளாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு தக்காளியை இரண்டாக நறுக்கி அதில் ஒரு பாதியில் இந்த சர்க்கரையைத் தொட்டு உதடுகளில் மென்மையாக ஸ்கரப் செய்யவும். இதுபோல செய்வதனால் உடனடியாகவே உதடு கருமை நிறம் குறைந்து காணப்படும். மேலும் மென்மையாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் காட்சியளிக்கும்.