kitchen remedies for cracked heels: உங்களுக்கு குதிக்கால் வெடிப்பு இருக்கிறதா? இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க! வெடிப்பு இருந்த தடமே இல்லாம போயிடும் !
அழகு படுத்திக் கொள்ளுதல் என்று ஆரம்பித்தாலே அனைவரும் முதன்மையாக நினைப்பது முகம் தான். முகத்தை அழகுப்படுத்திக் கொள்ளுதல் தான் அழகு என்று நினைப்பார்கள். தன்னை ஒப்பனைப் படுத்திக் கொள்ள முகத்திற்கு தேவையானவற்றை செய்வார்கள் உடலுக்கு செய்வார்கள் ஆனால் பாதங்களை மறந்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. பாதத்தை கவனித்து கொள்வது மிக அவசியம். நம்மை அழகாக காட்டிக் கொள்ள முடிக்கான ஆடைகளை அணிந்து கொள்வோம். பாதத்திற்கு மிடுக்கான செருப்பு அணிவோம். ஆனால் பாதம் பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்காமல் வெடிப்புகள் பிளவுகள் ஏற்பட்டிருக்கும்.
இதுபோன்று குதிகால் வெடிப்பு பாத வெடிப்பு இருப்பவர்கள் ஒரு பொது இடத்தில் காலணிகளை கழற்றி நடப்பதற்கும் நிற்பதற்கோ சங்கடப்படுவார்கள். முகத்தை கவனிக்கும் அளவிற்கு நம் பாதங்களை கவனிக்க தவறுகிறோம். நம் காலுக்கு போதுமான கவனிப்பு கொடுக்கவில்லை. இப்படி காலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது பித்த வெடிப்பு, குதிகால் வெடிப்பு, சரும வறட்சி போன்றவை ஏற்படுகிறது. இனி கவலை வேண்டாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு இந்த குதிகால் வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் சரி செய்யலாம்.
வாழைப்பழம்

முதலில் பாதத்தை நன்கு கழுவி துணியால் துடைத்து உலர வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வாழைப்பழங்களை தோலுரித்து அதன் பலத்தை நன்றாக மசித்து ஒரு பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளுங்கள். பாத வெடிப்பு ஏற்பட்ட பாதத்தில் முழுவதும் அப்ளை செய்து விடுங்கள். வெடிப்பு இருக்கும் இடுக்குகளில் நன்றாக அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் அல்லது 25 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து உரித்து வைத்துள்ள வாழைப்பழத் தோலை எடுத்துக்கொண்டு கால் பாதம் முழுவதும் நன்றாக மசாஜ் செய்யவும். அந்த வாழைப்பழத்துடனே சேர்த்து வாழைப்பழத் தோலை வைத்து மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு

காலை நன்றாக சுத்தம் செய்து அதாவது சோப் போட்டு அழுக்கில்லாமல் கழுவி எடுங்கள். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை முழுவதுமாக பிழிந்து கலக்கிக் கொள்ளுங்கள். கால் பாதத்தை அந்த வெதுவெதுப்பான நீரில் வைத்து ஒரு 20 நிமிடங்கள் அப்படியே உட்காருங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஒரு பாதத்தை எலுமிச்சை பல தோலை கொண்டு நன்றாக ஸ்கிரப் செய்யவும். இப்படி இரண்டு பாதத்தையும் எலுமிச்சம்பழத் தோலை கொண்டு ஸ்கிரப் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கால் பாதங்களில் வெடிப்புகளில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா
கால் பாதம் மூக்கும் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொள்ளவும். அதில் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். முன்பே காலை நன்றாக சோப் போட்டு நேரில் கழுவி மண்ணில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். சுத்தப்படுத்திய கால் பாதத்தை பேக்கிங் சோடா கலந்த நீரில் ஒரு 15 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு சொரசொரப்பான கல்லோ அல்லது , ஸ்கிரப்பர் அல்லது தேங்காய் நார் போன்றவற்றை பயன்படுத்தி காலை நன்கு தேய்க்கவும். இப்படி செய்வதனால் காலில் உள்ள அழுக்கு முழுமையாக நீங்கி இருந்த செல்கள் முழுவதும் அகற்றப்படுகின்றன.
கற்றாழை ஜெல்

கால்களை நன்றாக கழுவி பாதத்தை 10 முதல் 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். பிறகு ஒரு சுறுசுரப்பான கல்லோ அல்லது தேங்காய் நார் போன்று எடுத்துக்கொண்டு கால்களை நன்றாக தேய்த்து அழுக்க மட்டும் இறந்து செல்களை நீக்கிவிடவும். பிறகு கற்றாழை ஜெல்லை எடுத்து நன்றாக கால் பாதம் முழுவதும் வெடிப்புள்ள பகுதிகளில் நன்றாக தேய்க்கவும். ஜெல் தைத்த பிறகு கால்களைஒரு சாப்ட் கொண்டு மூடவும் அல்லது ஏதேனும் காட்டன் துணி கொண்டு மூடவும். காலை எழுந்து காலை எப்பொழுதும் போல் கழுவி விடவும். தினமும் இது போல செய்து வந்தால் குதிகால் வெடிப்பு நீங்கி வலியும் மறையும்.
அரிசி மாவு வினிகர் மற்றும் தேன்
அரிசி மாவு ஒரு சிறந்த எக்ஸ்பாலியேட்டராக செயல்படும் திறமை கொண்டது.
இது சருமத்திற்கு ஊட்டமளித்து இரண்டு செல்களை நீக்குகிறது. இயற்கையாகவே கிருமி நாசினையாக செயல்படும் தேன் பாதத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. மற்றும் வெடிப்புகளை குணப்படுத்துகிறது. வினிகர் பாதத்தை லேசாக ஈரமாக்குகிறது. அரிசி மாவு வினிகர் மற்றும் தேனாகிய மூன்றையும் சம அளவு எடுத்து கால் பாதங்களில் உள்ள வெடிப்புகளில் நன்றாக தேய்த்து இருவது அல்லது 30 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் காலை அலசவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்

சமையலுக்குப் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்கள் எளிதில் சருமத்தில் உறிஞ்சப்படும். வைட்டமின் ஏ வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ களை கொண்டுள்ளது காய்கறி எண்ணெய். நல்லெண்ணெய் புண்களை எளிதாக ஆற்றும் திறன் கொண்டது. தேங்காய் எண்ணெய் சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் காக்க உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் பாதத்திற்கு தேய்ப்பதனால் பாதத்தை மிருதுவாக்கி வெடிப்புகளை சரி செய்யும். தேங்காய் எண்ணெய் தேய்ப்பதனால் புதிய செல்கள் உருவாகிறது. பழைய செல்கள் நீக்கப்படுகிறது. இதன் மூலம் பாத வெடிப்புகள் மறைய தொடங்கும். தினமும் இதுபோல தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கால்களில் முழுவதும் தடவிக் கொண்டு உறங்குங்கள். விரைவில் நல்ல பலன் தரும்.
எப்சம் சால்ட்
குதிக்கால் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான நீரை ஒரு பாத் டப்பில் எடுத்துக் கொள்ளவும். அதில் மூன்று அல்லது நான்கு டீஸ்பூன் எப்சம் சால்ட் சேர்த்து நன்றாக கரைத்து அதில் குதிகால் மூழ்கும் அளவிற்கு கால்களை வைக்கவும். 20 நிமிடங்கள் அப்படியே வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்திருக்கவும். 20 நிமிடங்கள் கழித்து கால்களை ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்துவிட்டு ஏதேனும் ஒரு மாஸ்டரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்யவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்து வந்தால் குதிகாலில் அல்லது கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறைந்து, குதிகால் வலியும் நீங்கி பாத வெடிப்பு வலி நீங்கும்.
வினிகர்
குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் ஒன்றாக பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவற்றை போக்குவதற்காக வினிகர் பயன்படுகிறது. குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் ஒரு பாத் ட்ரபிள் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து. அதில் கால்களை 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கால்களில் உள்ள பூஞ்சைகள் செயலிழக்கப்படுகிறது. அதனால் மேலும் குதிகால் வெடிப்பு ஏற்படாமல் பாதம் பாதுகாக்கப்படுகிறது.