4 ways to remove facial hair without waxing: வலி இல்லாமல் வேக்சிங் இல்லாமல் முகத்தில் உள்ள முடிகளை சுலபமாக நீக்கலாம்!
ஆண்கள் பெண்கள் இருவருமே முகத்தில் முடி இல்லாமல் பார்ப்பதற்கு வழு வழு என பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக பெண்கள் இதற்காக வலிகள் மிகுந்த வேக்சிங்களை செய்து கொள்கிறார்கள்.
இப்படி வேக்சிங் செய்து கொள்வதன் மூலம் வலிகள் அதிகமாக இருப்பதோடு நேரமும் அதிக அளவில் செலவிடப்படும். அனைத்து சருமத்தினருக்கும் இந்த வேக்சிங் என்பது ஏற்றுக்கொள்ளப்படாது. சிலருக்கு வாக்சிங் செய்வதனால் முகத்தில்சிவப்பு நிறமாக புள்ளிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வலி இல்லாமல் முகத்தில் உள்ள முடிகளை வேக்சிங் செய்வதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை கீழே உள்ள கட்டுரையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கான வேறு வழிமுறைகள்
முகத்தில் உள்ள முடியை அகற்றுவதன் மூலம் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வேக்சிங் பயன்படுத்தி முடியை அகற்றி வருவதனால் முகத்தில் ஆங்காங்கே சிவப்பு நிறமாக மாறுதல், எரிச்சல், சிவந்து காணப்படுதல், ஆங்காங்கே சில ரத்த புள்ளிகள், மற்ற சரும பிரச்சனைகள் என பலப்பல புதிது புதிதாக தோன்றும். ஆனால் இந்த மாற்று வலியை பயன்படுத்துவதன் மூலம் எந்த ஒரு புதிய சரும பிரச்சனைகளோ அல்லது வேறு எனும் சரும பிரச்சனை எதுவும் வராது.
த்ரெட்டிங்
நாம் புருவங்களை சரி செய்வதற்கு த்ரெட்டிங் செய்கிறோம். அவை லேசான வழியை மட்டும் சிறிது நேரம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டுமே அந்த வலியை தரும். அதுவும் லேசான வழி. ஆனால் இந்த த்ரெட்டிங் செய்வதுனால் வேறு எந்த ஒரு சரும பிரச்சனையும் வேறு எந்த ஒரு பக்க விளைவும் வராது. அதனால் இந்த த்ரெட்டிங் பயன்படுத்தி முகத்தில் வாய்ப்பகுதிக்கு மேலே உள்ள முடிகளை அகற்றலாம். இதன் மூலம் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே லேசான வலி இருக்கும்.
நெற்றியின் மேல் உள்ள சிறு சிறு நொடிகளையும் இந்த த்ரெட்டிங் முறையை பயன்படுத்தி முடிகளை நீக்கலாம்.
எபிலேட்டர்
வலிகள் இல்லாத சிறந்த தீர்வாக இந்த எபிலிட்டர் விளங்குகிறது. வீட்டில் உபயோகிக்கும் வழியில்லாத பொருளைக் கொண்டு முடியை அகற்ற வேண்டும் என்று நினைத்தால் இந்த எபிலிட்டரை பயன்படுத்தலாம். எபிலேட்டர் என்றால் வேறு ஒன்றும் இல்லை முடியை அகற்றுவதற்கு பேனா போல உருவம் உடைய ஒரு கருவி. இதனை பேட்டரி பயன்படுத்தி இயக்குவார்கள். இது எந்த ஒரு வலியையும் தராது. மேலும் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் கொடுக்காது. விலையும் குறைந்தது.
லேசர் ட்ரீட்மென்ட்
இன்றைய நவீன காலகட்டத்தில் உடலின் உள் உள்ள உறுப்புகளில் ஏதேனும் பிரச்சினை என்றாலும் கண்களின் உள் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் அவற்றை அனைத்தையும் லேசர் மூலமே சரி செய்ய பல மருத்துவர்கள் வல்லுனர்களாக உள்ளனர். அவற்றுள் முடியை அகற்றுவதற்கு இந்த லேசர் ட்ரீட்மென்ட் பயன்படுகிறது. அனைத்து சருமத்தினருக்கும் மற்றும் அனைத்து வகையான முடிகளுக்கும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் எந்த ஒரு சரும பிரச்சனையையும் ஏற்படுத்தாமல் எந்த ஒரு வழியும் இல்லாமல் முடியை மட்டும் அழகாக வேரோடு நீக்கி முகத்துக்கு பளபளப்பை கூட்ட இது உதவுகிறது. மூன்று வேறு வேறு கதிர்களை ஒன்றாக கூட செய்து முடியை சரியாக நோக்கி வேரோடு நீக்குவதற்கு உதவுகிறது. இதில் குளிரூட்டும் முறை இருப்பதால், எந்த ஒரு வழியோ அல்லது எந்த ஒரு எரிச்சலோ உங்கள் சருமத்திற்கு இருக்காது.
மின்னார் பகுப்பு
முகத்தில் நிரந்தரமாக முடியை நீக்க வேண்டும். எப்பொழுதும் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக முடி இல்லாமல் தோற்றமளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு இந்த மின்னார் பகுப்பை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு முடிகளுக்கும் வேரோடு ஊசியை செலுத்தி மின்னோட்டம் மூலம் முடியை முற்றிலும் அகற்றி செய்வர்.
ஹேர் ரிமூவல் க்ரீம்
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களுக்கு உகந்ததாக இல்லை என்று நினைத்தாலோ அல்லது விலை உயர்வாக இருக்கும் என்று நினைத்தாலோ அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டு விடுமோ என்ற ஒரு பயத்தினாலோ அல்லது இதனை செய்வதில் விருப்பமில்லை என்றாலும் இந்த ஹேர் ரிமூவல் கிரீமை நீங்கள் பயன்படுத்தலாம். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் எளிதில் முடி அதிக அளவில் வளரும். ஆனால் இதை நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் முடி முகத்தில் வளர்வதை தடுக்கலாம். மிக அதிகமாக பயன்படுத்தி வந்தால் ஏதேனும் அலர்ஜி போன்ற பிரச்சனை உருவாகலாம். அனைத்து சருமத்தினருக்கும் இது ஏற்காடு. இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு தெரிந்து கொண்டு பிறகு இவற்றை பயன்படுத்தலாம்.மேலும் பல ஃப்ளேவர்களில் பல வாசனையுடன் விற்கப்படுகிறது.
தேன் மற்றும் சர்க்கரை
இந்தப் பெண் மற்றும் சர்க்கரை பயன்படுத்தி செய்யும் இயற்கை வேக்சிங் ஆனது லேசாக வலியை கொடுக்குமே தவிர வேறு எந்த ஒரு பக்க விளைவுகளும் வேறு எந்த ஒரு சர்ம கோளாறும் ஏற்படாது.
ஒரு ஸ்பூன் தேனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரையை கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரையும் வரை நன்றாக கொதிக்க வைத்து விட்டு. பிறகு லேசான சூடோடு இருக்கும் பொழுது முகத்தில் தேவையற்ற முடி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து மேலே ஒரு காட்டன் துணியை வைத்து முகத்தை மூடி வைத்துக் கொள்ளவும்.
நன்றாக காய்ந்த பிறகு இது பார்ப்பதற்கு ஒரு மாஸ்க் போல் தோற்றமளிக்கும். அப்பொழுது இதனை எதிர்ப்புற பக்கத்தில் இருந்து அதாவது கீழிருந்து மேலாக அல்லது மேலிருந்து கீழாக என எதிர்ப்புற பக்கத்தில் இருந்து சற்று வேகமாக எடுக்கவும். இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் இந்த தேன் மற்றும் சர்க்கரைப்பாகுடன் வந்துவிடும். சற்று வலி இருக்குமே தவிர வேறு எந்த ஒரு பக்க விளைவுகளும் இருக்காது.